முதல்வரை சந்திக்க வருமுன்னர் 'சுத்தமாக' வாருங்கள்: தலித் குடும்பங்களுக்கு சோப்பு, ஷாம்பூ வழங்கிய பாஜக! 

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்க்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பாக சுத்தமாக குளித்துவிட்டு வாருங்கள் என்று தலித் குடும்பங்களுக்கு
முதல்வரை சந்திக்க வருமுன்னர் 'சுத்தமாக' வாருங்கள்: தலித் குடும்பங்களுக்கு சோப்பு, ஷாம்பூ வழங்கிய பாஜக! 

புதுதில்லி: உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்க்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பாக சுத்தமாக குளித்துவிட்டு வாருங்கள் என்று தலித் குடும்பங்களுக்கு பாஜகவினர் சோப்பு, ஷாம்பூ வழங்கிய சம்பவம் கடும் சர்சையை கிளப்பியுள்ளது.  

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் உள்ளது மெயின்பூர் தீனப்பத்தி கிராமம். இங்கு முஸாகர் எனப்படும் தலித் இன மக்கள் வசித்து வருகிறார்கள்.இந்த கிராமத்தில் வரும் வியாழன் அன்று முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்கும் அரசு விழா ஒன்று நடைபெற உள்ளது.

இந்த விழாவில் பங்கேற்கும் முன்பாக சுத்தமாக குளித்து விட்டு வர வேண்டும் என வலியுறுத்தி  அப்பகுதி பாரதிய ஜனதா கட்சியினர், அந்த தலித் இன மக்களுக்கு  சோப்பு, ஷாம்பு மற்றும் வசனைத் திரவியங்க களை வழங்கியுள்ளனர். அத்துடன் அதை கண்டிப்பாக பயன்படுத்தி தூய்மையாக வர வேண்டுமென்று அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரமானது செய்தித்தாள்களில் வெளிவந்து பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்த செய்தியை மேற்கோள் காட்டி காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், 'பாரதிய ஜனதா கட்சியினை சேர்ந்தவர்கள் எந்த சோப்பினை பயன்படுத்தி தங்கள் மன அழுக்கினை தூய்மைப்படுத்திக் கொள்ளப் போகிறார்கள், தயவு செய்து சொல்லுங்கள்" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com