மேற்கு வங்கத்தில் ஆற்றுக்கு அடியில் மெட்ரோ ரயிலுக்கு சுரங்கப் பாதை

மேற்கு வங்கத்தில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக நாட்டிலேயே முதல்முறையாக ஆற்றுக்கு அடியில் நடைபெற்றுவரும் சுரங்கப் பாதை அமைக்கும் பணி அடுத்த வாரம் நிறைவடைந்துவிடும் எனத்

மேற்கு வங்கத்தில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக நாட்டிலேயே முதல்முறையாக ஆற்றுக்கு அடியில் நடைபெற்றுவரும் சுரங்கப் பாதை அமைக்கும் பணி அடுத்த வாரம் நிறைவடைந்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பில் 16.6 கிலோ மீட்டர் தொலைவுக்கு கிழக்கு-மேற்கு மெட்ரோ ரயில் திட்டம் என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 10.6 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப் பாதை வழியேதான் மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது.
அதேபோல், கொல்கத்தாவையும், ஹெளராவையும் இணைக்கும் வகையில், ஹுக்ளி ஆற்றுக்கு அடியில் 520 மீட்டர் நீளத்துக்கு 2 சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டு, அதன் வழியே மெட்ரோ ரயில் விடப்படவுள்ளது. இதற்காக ஹுக்ளி ஆற்றுக்கு அடியில், 30 மீட்டர் ஆழத்தில் சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரூ.60 கோடி செலவில், கிழக்கு, மேற்கு என்று எதிரெதிர் திசைகளில் சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்போது, இந்த சுரங்கப்
பாதைகளை ஒரு நிமிடத்தில் கடந்து சென்று விட முடியும்.
சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் செல்கையில், பாதியில் அது நின்றுவிடும் பட்சத்தில், பயணிகளை மீட்பதற்காக பக்கவாட்டில் பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. சுரங்கப் பாதை அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டது. இதில் ஆற்றுக்கு கீழ் நடைபெற்றுவரும் சுரங்கப் பாதை அமைக்கும் விரைவில் நிறைவடைந்து விடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நாட்டிலேயே முதல்முறையாக மும்பை-ஆமதாபாத் இடையே செயல்படுத்தப்பட இருக்கும் புல்லட் ரயில் திட்டத்துக்கும், கடலுக்கு அடியில் 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக அப்பகுதியில் இருக்கும் மண்ணின் தரத்தை பரிசோதிக்க குழித் தோண்டும் பணிகள் நடந்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com