வேலைவாய்ப்பின்மையை விட வேலைக்கான தகுதியின்மையே பிரச்னை

நாட்டில் வேலைவாய்ப்பின்மையை விட வேலைக்கான தகுதியின்மையே பெரும் பிரச்னையாக உள்ளது என்று மத்திய கொள்கைக் குழு (நீதி ஆயோக்) தெரிவித்துள்ளது.

நாட்டில் வேலைவாய்ப்பின்மையை விட வேலைக்கான தகுதியின்மையே பெரும் பிரச்னையாக உள்ளது என்று மத்திய கொள்கைக் குழு (நீதி ஆயோக்) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளுக்கான வேலைவாய்ப்பு தொடர்பான செயல் திட்டத்தின் வரைவு அறிக்கையை மத்திய கொள்கைக் குழு அண்மையில் தயாரித்தது. இக்குழு சார்பில், தில்லியில் கடந்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தின்போது மேற்கண்ட அறிக்கை குழுவின் உறுப்பினர்களான அனைத்து மாநில முதல்வர்களிடம் வழங்கப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டில் வேலைவாய்ப்பின்மை முக்கிய பிரச்னையாக கருதப்படுகிறது. உண்மையில், வேலைவாய்ப்பின்மையை விட வேலைக்கான தகுதியின்மையே பெரும் பிரச்னையாக உள்ளது. ஒரு நபர் செய்ய வேண்டிய வேலையை 2 அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்கள் செய்து வருகின்றனர்.
தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (என்எஸ்எஸ்ஓ) ஆய்வின்படி, கடந்த 2011-12 நிதியாண்டில் விவசாயத் துறையில் 49 சதவீத வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. எனினும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இத்துறையின் பங்களிப்பு வெறும் 17 சதவீதம் மட்டுமே. உற்பத்தித் துறையைப் பொருத்தவரை, 20 தொழிலாளர்களுக்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் கடந்த 2011-12 நிதியாண்டில் 72 சதவீத வேலைவாய்ப்புகளை உருவாக்கின. எனினும், இத்துறையின் மொத்த உற்பத்தித் திறன் 12 சதவீதம் ஆகும்.
2006-07 நிதியாண்டின் சேவைத் துறைக்கான என்எஸ்எஸ்ஓ ஆய்வின்படி 650 மிகப்பெரிய நிறுவனங்கள் 2 சதவீத ஊழியர்கள் மூலம் 38 சதவீத உற்பத்தித் திறனை வெளிக்கொணர்ந்தது.
அதேசமயம், பிற சேவை நிறுவனங்களின் 98 சதவீத ஊழியர்கள் மூலம் 62 சதவீத உற்பத்தித் திறன் மட்டுமே எட்டப்பட்டது.
இதற்குத் தீர்வாக அதிக உற்பத்தித் திறனுடன் கூடியதும், அதிக ஊதியம் வழங்கக் கூடியதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
சீனாவில் பெரிய அளவிலான உற்பத்தித் தொழிற்சாலைகளில் அதிக ஊதியம் பெறும் ஊழியர்களின் வயது அதிகரித்து வருவதால், அந்தத் தொழிற்சாலைகள் குறைந்த ஊதியத்தில் இளைஞர்களைப் பணியமர்த்த திட்டமிட்டுள்ளன. இதனால், இந்தியாவே பெரிதும் பயனடையப் போகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com