அக்ஷய் குமார், சாய்னாவை கண்டித்து மாவோயிஸ்டுகள் துண்டுப் பிரசுரம்

ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் மற்றும் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நெவால் ஆகியோரைக் கண்டித்து மாவோயிஸ்டுகள் சார்பில் சத்தீஸ்கர் மாநிலத்தில் துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
அக்ஷய் குமார், சாய்னாவை கண்டித்து மாவோயிஸ்டுகள் துண்டுப் பிரசுரம்

ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் மற்றும் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நெவால் ஆகியோரைக் கண்டித்து மாவோயிஸ்டுகள் சார்பில் சத்தீஸ்கர் மாநிலத்தில் துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
நக்ஸல்களின் தாக்குதலில் பலியான துணை ராணுவப் படை வீரர்களின் குடும்பத்தினருக்கு அவர்கள் இருவரும் நிதியுதவி வழங்கியதைக் கண்டித்து இந்தப் பிரசுரங்கள் வெளியானதாகத் தெரிகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) மீது நக்ஸலைட்டுகள் அண்மையில் நடத்திய தாக்குதலில் 26 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சிலரது குடும்பத்தினருக்கு அக்ஷய் குமாரும், சாய்னாவும் நிதியுதவி வழங்கினர். இந்நிலையில், இதனைக் கண்டித்து சமூக வலைதளங்களில் துண்டுப் பிரசுரம் ஒன்று வெளியானது. மாவோயிஸ்டுகள் சார்பில் வெளியிட்டதாகக் கருதப்படும் அதில் இடம்பெற்றிருந்த வாசகங்கள்:
மக்கள் விடுதலை கொரில்லா படை (நக்ஸல் அமைப்பு) சார்பில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அக்ஷய் குமார், சாய்னா உள்ளிட்டோர் உதவி செய்வது கண்டனத்துக்குரியது. சமூகப் பிரபலங்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் புரட்சியை முன்னெடுக்கும் ஏழை மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அப்பாவி பழங்குடியின மக்களை மத்திய அரசுப் படைகள் கொன்றொழித்து வருகின்றன.
சாமானியர்களுக்கு எதிராகத் தொடுக்கப்படும் இந்த அடக்குமுறையும், வன்முறையும் கண்டிக்கத்தது. மனித உரிமைகளுக்குப் புறம்பானது என்று அந்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com