மாட்டுக்கறி விருந்துகள் குறித்து மதச்சார்பற்றவர்கள் மெளனம் ஏன்? உ.பி. முதல்வர் ஆதித்யநாத் கேள்வி

மாட்டுக்கறி விருந்துகள் குறித்து மதச்சார்பற்றவர்கள் மெளனம் ஏன்? உ.பி. முதல்வர் ஆதித்யநாத் கேள்வி

பிற மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்று கூறும் மதச்சார்பற்றவர்கள், மாட்டுக்கறி விருந்து குறித்து மெளனம் காப்பது ஏன்? என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுகுறித்து லக்னெளவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பாஜக கூட்டத்தில் அவர் பேசியதாவது: அனைவரும் பிற மதத்தினரின் உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும் என்று மதச்சார்பின்மைவாதிகள் கூறுவதை நான் கேட்டுள்ளேன்.
ஆனால், சந்தைகளில் கறிக்காக மாடுகளை விற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து கேரள மாநிலத்தில் மாட்டுக்கறி விருந்துகள் நடைபெறுகின்றன.
ஹிந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் நடைபெறும் அந்தப் போராட்டங்கள் குறித்து மதச்சார்பற்றவர்கள் ஏன் மெளனம் காக்கின்றனர்?
தில்லி பல்கலைக்கழகம், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உரக்கக் குரலெழுப்பியவர்கள் எல்லாம், மாட்டுக் கறி விருந்துகள் குறித்து வாயே திறக்காதது ஏன்? என்றார் அவர். சந்தைகளில் கறிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கு கேரள மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த உத்தரவை எதிர்க்கும் வகையில், கேரளம் முழுவதும் மாட்டுக் கறி உண்ணும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com