காஷ்மீரும், காஷ்மீரிகளும் இந்தியாவுக்கே சொந்தம்

காஷ்மீர், காஷ்மீர் மக்கள், காஷ்மீர் கலாசாரம் ஆகிய அனைத்தும் இந்தியாவுக்கே சொந்தம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்தார்.
காஷ்மீரும், காஷ்மீரிகளும் இந்தியாவுக்கே சொந்தம்

காஷ்மீர், காஷ்மீர் மக்கள், காஷ்மீர் கலாசாரம் ஆகிய அனைத்தும் இந்தியாவுக்கே சொந்தம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்திலுள்ள சுபர்தி பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
காஷ்மீர், அந்த மாநில மக்கள், அந்த மாநிலத்தின் கலாசாரம் ஆகிய அனைத்தும் இந்தியாவுக்கே சொந்தமானதாகும். எல்லையில் பாதுகாப்புப் படை வீரர்களின் கௌரவத்துக்கு பங்கம் விளைவித்து வருபவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்பட்டு வருகிறது. ராணுவ வீரர்கள் 2 பேரின் தலைகளைத் துண்டித்த பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டது.
20 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள பி-20 மாநாட்டில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, 'ஊழல் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா போர் புரிந்து வருகிறது. அந்த நடவடிக்கையை மேலும் சிறப்பாக மேற்கொள்ள வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை தெரியப்படுத்தி உதவ வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
அதன்பயனாக, வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை நம்மால் தற்போது ஆய்வு செய்ய முடிகிறது என்று ராஜ்நாத் சிங் பேசினார்.
பணமதிப்பிழப்பு விவகாரம், விவசாயிகள் பிரச்னை, ஊழல், பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ராஜ்நாத் சிங் இந்த நிகழ்ச்சியில் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com