ராஜஸ்தானில் திருமண மண்டபத்தில் இருந்த மின்மாற்றி வெடித்து 11பேர் பலி: 22 பேர் காயம்

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்பூரில் மின்மாற்றி வெடித்து 11 பேர் உயிரிழத்துள்ளனர். 22க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ராஜஸ்தானில் திருமண மண்டபத்தில் இருந்த மின்மாற்றி வெடித்து 11பேர் பலி: 22 பேர் காயம்

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்பூரில் மின்மாற்றி வெடித்து 11 பேர் உயிரிழத்துள்ளனர். 22க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜெய்ப்பூரை அடுத்த கத்லோ கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இருந்த மின்மாற்றி வெடித்ததில் 14 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பலத்த காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் கர்ப்பிணியையும் அவரது வயிற்றில் இருந்த குழந்தைகளையும் காப்பாற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்தனர். ஆனால் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. ஆபத்தான நிலையில் தாய் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்திற்கு மின்மாற்றி மீது விழுந்த உயர் மின்னழுத்த கேபிள் தான் காரணம் என கூறப்படுகிறது. கேபிள் மின்மாற்றி மீது விழுந்ததும் மின்மாற்றி வெடித்துள்ளது. அப்போது மின்சாரம் துண்டிக்கப்படாததே 14 பேர் உயிரிழப்புக்கு காரணம் என அந்த பகுதியினர் கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.  

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதல்வர் வசுந்தரா ராஜே தில்லிக்கு செல்ல திட்டமிட்டிருந்த பயணத்தை ரத்து செய்துவிட்டு, எஸ்எம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். சம்பவம் குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்படும் எனவும் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்ச இழப்பீடும் வழங்ப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

மின்மாற்றி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும், வெடி விபத்து ஏற்பட்ட இடத்தை மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் பார்வையிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com