கர்நாடகாவில் வாழும் மக்கள் கட்டாயம் கன்னடம் கற்கவேண்டும்: கர்நாடக உதய தின விழாவில் முதல்வர் சித்தராமையா கண்டிப்பு

கர்நாடக மாநிலத்தில் வாழும் பிற மாநில மக்கள் கன்னட மொழியை கட்டாயம் கற்க வேண்டும் என கர்நாடக உதய தின விழாவில்
கர்நாடகாவில் வாழும் மக்கள் கட்டாயம் கன்னடம் கற்கவேண்டும்: கர்நாடக உதய தின விழாவில் முதல்வர் சித்தராமையா கண்டிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் வாழும் பிற மாநில மக்கள் கன்னட மொழியை கட்டாயம் கற்க வேண்டும் என கர்நாடக உதய தின விழாவில் முதல்வர் சித்தராமையா இவ்வாறு பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.   

1956-இல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, கன்னடம் பேசும் மக்கள் கொண்ட பகுதிகளை ஒருங்கிணைத்து மைசூரு மாநிலம் உருவாக்கப்பட்டது. அதன்பிறகு, 1973-இல் மைசூரு மாநிலம், கர்நாடகம் மாநிலம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்த ஆண்டு முதல் கர்நாடக மாநில உதய தின விழா நவ. 1-ஆம் தேதி கன்னடர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, 1996-ஆம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு கர்நாடக மாநில உதய தின (ராஜ்யோத்சவா) விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுடன் ரூ.1 லட்சம், 20 கிராம் தங்கப் பதக்கம், பட்டயம் வழங்கப்படுகின்றன.

பெங்களூருவில் இன்று புதன்கிழமை பெங்களூருவின் கன்டிராவ அரங்கில் கர்நாடகா உதய தின (ராஜியோத்சவா) விழா  நடைபெற்றுவருகிறது. இதில் முதல்வர் சித்தராமையா கலந்துகொண்டு பேசியதாவது:

கர்நாடக மாநிலத்தில் வாழும் பிற மாநில மக்கள் கன்னட மொழியை கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும். கர்நாடகத்தில் வசிக்கும் மக்கள் கன்னடர்களே. எனவே, இங்கு வாழும் மக்கள் தங்களது குழந்தைகளுக்கும் கன்னடம் கற்றுக்கொடுக்க வேண்டும். நான் எந்த மொழிக்கும் எதிரானவன் அல்ல. 

ஆனால், இங்குள்ள மக்களுக்கு கன்னடம் கற்காவிட்டால் அது மொழியை அவமதிப்பது போல் ஆகிவிடும். கன்னடர்கள் தங்கள் மாநில மொழிக்கு மிகவும் பாசமானவர்களாக இருக்க வேண்டும். கன்னட மொழியைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட சித்தராமையா, கன்னட மொழியை கற்றுக் கொள்வதற்காக ஒரு அமைப்பை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் கேட்டுக் கொண்டார்.

மேலும் கர்நாடகாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் கன்னட மொழியை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கூறினார். 

கர்நாடாக கடந்த 60 ஆண்டுகளில் கன்னடம் முன்னுரிமை பெறுவதில் வெற்றி பெறவில்லை என்று முதல்வர் தெரிவித்தார்.

கர்நாடகாவின் முக்கிய நகரங்களில் தமிழர்கள் அதிகமான அளவில் வசித்து வரும் நிலையில், சித்தராமையா இவ்வாறு பேசியிருப்பதாவது சேர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

கர்நாடகாவில் பணியாற்றும் அதிகாரிகள் நிச்சயம் கன்னடம் தெரிந்திருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் அவர்களுக்கு இங்கு பணியாற்ற இடமில்லை என சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் சித்தராமையா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com