தில்லியில் கடும் பனி: மூச்சுத்திணறல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை

தில்லியில் ஏற்பட்டுள்ள கடும் பனிமூட்டம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை வரை பள்ளிக்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் கடும் பனி: மூச்சுத்திணறல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை

தில்லியில் கடந்த சில தினங்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். 

அதுமட்டுமல்லாமல் தில்லியில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக காறறு மாசு அளவு அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், தில்லியில் புதன்கிழமை கடும் பனி நிலவுகிறது. அதோடு காறறு மாசும் சேர்ந்துள்ளதால் அங்குள்ள மக்கள் உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்படுகின்றனர்.

தங்களுக்கு சுவாசக் கோளாறு, தொண்டைப் பகுதி, கண்கள் மற்றும் இதர பகுதிகளில் தொடர்ந்து அரிப்பு ஏற்படுவதாக தில்லி மாணவர்கள் தெரிவித்தனர்.

எனவே வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா புதன்கிழமை உத்தரவிட்டார்.

மேலும், நகரம் முழுவதும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள், ஆஸ்துமா, இருதய குறைபாடுகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

தில்லி மக்கள் அனைவரும் தங்களால் இயன்றவரை வெளியிடங்களில் இருக்க வேண்டாம், சைக்கிளிங், ஜாக்கிங் உள்ளிட்ட வெளி உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டாம் என இந்திய மருத்துவக் கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com