யோகா செய்வதை நிறுத்து: இஸ்லாமிய பெண் ஆசிரியருக்கு வந்த கொலை மிரட்டல்!      

ஜார்கண்ட்டில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் யோகா பயிற்றுநராக பணியாற்றும் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு, கற்றுக் கொடுப்பதை நிறுத்துமாறு இரு மதங்களின் தரப்பிலிருந்தும் கொலை மிரட்டல்... 
யோகா செய்வதை நிறுத்து: இஸ்லாமிய பெண் ஆசிரியருக்கு வந்த கொலை மிரட்டல்!      

பாட்னா: ஜார்கண்ட்டில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் யோகா பயிற்றுநராக பணியாற்றும் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு, கற்றுக் கொடுப்பதை நிறுத்துமாறு இரு மதங்களின் தரப்பிலிருந்தும் கொலை மிரட்டல் வருவதை அடுத்து போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பிரிமிட்டிவ் ட்ரைப்ஸ் சர்வீஸ் இன்ஸ்டிட்யூஷன் என்ற தனியார் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு யோகா பயிற்றுவிக்கும் ஆசிரியராக ரபியா நாஸ்(21) என்ற இஸ்லாமியப் பெண் பணிபுரிந்து வருகிறார்.

சமீப காலமாக இவருக்கு இந்து மற்றும் முஸ்லீம் அமைப்புகளிடம் இருந்து மிரட்டல்கள் வந்துள்ளன. யோகா பயிற்றுவிப்பதை கைவிடுமாறும், பெயரை மாற்றிக் கொள்ளுமாறும், முகத்திரை அணிந்து நடமாடுமாறும் அல்லது கடும் விளைவுகளை சந்திக்க நேரும் என்றும் அந்த மிரட்டல்கள் மூலம் அவர் அறிவுறுத்தப்பட்டுளார். இந்த மிரட்டல்கள் தொடர்பாக அவர் ஜார்கண்ட் முதல்வர் ரகுபீர் தாஸுக்கு தகவல்கள தெரியப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து தற்பொழுது அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரபியா நேற்று ராஞ்சி துணை காவல்துறை கண்காணிப்பாளர் குல்தீப் திவிவேதியைச் சந்தித்தார். அதற்கு பின்னர் திவிவேதி செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, ரபியா தன்னுடைய பிரச்சினைகளை எடுத்துக் கூறியுள்ளார். அவருடன் ஒரு ஆண் மற்றும் பெண் போலீசார் 24 மணி நேரமும் கூடவே இருந்து பாதுகாப்பு அளிப்பார்கள். அதே நேரம் அவருக்கு மிரட்டல் விடுத்தவர்களை அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருகிறது.

இவ்வாறுஅவர் தெரிவித்தார்.

ரபியா சில மாதங்களுக்கு முன்னர் சாமியார் பாபா ராம்தேவுடன் ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் யோகா செய்த்தவார் என்பதும் அவரது சேவைக்காக ;யோக பிரபா என்னும் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com