'பிச்சை' எடுக்கத் தடை: காவல்துறை ஆணையர் உத்தரவு!

சாலைகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் பிச்சை எடுக்க இரண்டு மாதங்கள் தடை விதிப்பதாக ஹைதராபாத் காவல்துறை ஆணையர் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
'பிச்சை' எடுக்கத் தடை: காவல்துறை ஆணையர் உத்தரவு!

ஹைதராபாத்தில் உள்ள சாலைகள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிச்சை எடுக்க காவல்துறை ஆணையர் தடை விதித்து ஆணை பிறப்பித்தார்.

இதுதொடர்பாக ஹைதராபாத் காவல்துறை ஆணையர் எம்.மஹேந்தர் ரெட்டி தெரிவித்ததாவது:

சாலைகள் மற்றும் நடைபாதைகள் ஆகியப் பகுதிகளில் பிச்சை எடுப்பவர்களால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்து ஆளாவதாக புகார் தெரிவித்தனர். இதனால் சாலைகளில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் கூறினார்.

எனவே இதனைப் போக்கும் வகையில் எனது அதிகாரத்துக்கு உட்பட்டு புதிய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அடுத்து வரும் 2 மாதங்களுக்கு இங்கு பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றமாகும்.

எனது அதிகாரங்களுக்கு உட்பட்டு 1973, விதி எண் 144-ன் அடிப்படையில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த புதிய சட்டமானது இன்று காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த விதியானது 2018-ம் வருடம் ஜனவரி 1-ந் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதி எண் 188 மற்றும் ஹைதராபாத் காவல்துறை விதி எண் 1348 ஃபஸ்லி மற்றும் தெலுங்கானா அரசு பிச்சை தடுப்புச் சட்டம் 1977, ஜெ.ஜெ. விதி எண் 2000 ஆகியவற்றின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com