ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 70% வாக்குப்பதிவு!   

68 தொகுதிகளை கொண்ட ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்கு இன்று நடந்த வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 70% வாக்குப்பதிவு!   

புதுதில்லி: 68 தொகுதிகளை கொண்ட ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்கு இன்று நடந்த வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

68 தொகுதிகளைக் கொண்ட ஹிமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு இன்று வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் வீரபத்ர சிங் மற்றும் பாஜக முதல்வர் வேட்பாளரான பி.கே. தூமல் இடையே கடும் போட்டி நிலவுகிறது.  

வாக்குப்பதிவு சரியாக இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. இந்த முறை வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் ஒப்புகைச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தப்பட்டன. வாக்குப்பதிவு துவங்கியதும், மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

குறிப்பிட்ட சில இடங்களில் அந்த இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.  எந்த தொகுதியிலும் அசம்பாவிதமும் இல்லாமல் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை  5 மணிவரை 70 சதவீத வாக்குகள் பதிவானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று பதிவான வாக்குகள்  டிசம்பர் 18 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com