பொருளாதாரத்தை வலுப்படுத்த இளம் தொழில் முனைவோருக்கு ஜேட்லி அழைப்பு

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இளம் தொழில் முனைவோர் முன்வர வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கேட்டுக் கொண்டார்.
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் டி.எல். விஸ்வநாதனுக்கு தேசிய தொழில்முனைவோர் விருதை வழங்குகிறார்மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி. 
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் டி.எல். விஸ்வநாதனுக்கு தேசிய தொழில்முனைவோர் விருதை வழங்குகிறார்மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி. 

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இளம் தொழில் முனைவோர் முன்வர வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கேட்டுக் கொண்டார்.
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகத்தின் மூன்றாம் ஆண்டு நிறுவன தினத்தையொட்டி, 'தேசிய தொழில் முனைவு விருதுகள்-2017' வழங்கும் விழா தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழகத்தைச் சேர்ந்த டி.எல். விஸ்வநாதன் உள்ளிட்ட 15 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு தொழில்முனைவோருக்கு விருதுகளை வழங்கி அருண் ஜேட்லி பேசியதாவது:
அரசு மற்றும் தனியார் துறைகள் வழங்கும் வேலை வாய்ப்புகள் இந்தியாவின் மக்கள்தொகைக்கு ஏற்ற வகையில் இல்லை.இதனால், போதுமான வேலைவாய்ப்புகளை அரசு மற்றும் தனியார் துறைகளால் வழங்க முடிவதில்லை. இளம் தொழில் முனைவோர்கள்தான் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும். திறன் மேம்பாட்டுக்கும், தொழில் முனைவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. திறன் மேம்பாடு அடையும் போது தொழில் முனைவுகளும் அதிகரிக்கும். 
மத்திய, மாநில அரசுகளிடம் குறைந்த அளவிலேயே வேலைவாய்ப்புகள் உள்ளன. இதனால், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டியது அவசியமாகும். பல நாடுகளில் ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இந்தியாவில் போதுமான அளவு திறன்படைத்த ஆட்கள் உள்ளனர். எனவே, அவர்களுக்குத் தேவையான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இதற்கு தொழில்முனைவோர் முன்வர வேண்டும் என்றார் அருண் ஜேட்லி.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஜப்பான் நாட்டின் தூதர் கெஞ்சி ஹிராமாஸ்ரு பேசுகையில், 'தொழில் முனைவு தொடர்பில் பிரதமர் மோடி எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டிற்குரியவை. ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் இடையே அண்மையில் கையெழுத்தான ஒப்பந்தம் முக்கியமானதாகும். இதன் மூலம் இந்திய இளம் தொழில் முனைவோர்கள் ஜப்பானில் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம்' என்றார்.
மத்திய இயற்கை எரிவாயு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், 'இளைஞர்களின் திறனை மேம்பாடு அடையச் செய்வதன் மூலம் திறமைவாய்ந்த தொழிலாளர்களை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அனைத்து புதிய தொழில் முனைவோர்க்கும் அரசு ஆதரவை வழங்கி வருகிறது' என்றார். 
தேசிய தொழில் முனைவோருக்கான சிறந்த தனியார் வழிகாட்டி விருதைப் பெற்றுக் கொண்ட, தமிழகத்தைச் சேர்ந்த டி.எல்.விஸ்வநாதன் தினமணி செய்தியாளரிடம் கூறியதாவது: 
கிராமத்தில் உள்ள ஏழைத் தொழில் முனைவோருக்கான வழிகாட்டியாக கடந்த 25 ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறேன். சுமார் 3000 புதிய தொழில் முனைவோருக்கு வழிகாட்டியாக இருந்துள்ளேன். 
நான் அங்கம் வகிக்கும் 'பாரதீய யுவா டிரஸ்ட்' இதில் பெரும் பங்காற்றி வருகிறது' என்றார். இந்நிகழ்வில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை அதிகாரி சந்தா கொச்சார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com