இந்தியா அஹிம்சை வழி செல்வதாலேயே நம்மீதான தாக்குதல்கள் நடக்கிறது: வெங்கய்ய நாயுடு

இந்தியா அஹிம்சை முறையைப் பின்பற்றுவதால்தான் நம்மீது தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்படுவதாக வெங்கய்ய நாயுடு, சனிக்கிழமை தெரிவித்தார்.
இந்தியா அஹிம்சை வழி செல்வதாலேயே நம்மீதான தாக்குதல்கள் நடக்கிறது: வெங்கய்ய நாயுடு

இந்திய துணைக் குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் பேசியதாவது:

இந்திய நாடு அஹிம்சை முறையைப் பின்பற்றுகிறது. ஏனென்றால் நாம் அனைவரும் அமைதியை விரும்புகிறவர்கள். எனவே தான் நம்மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. 

இந்தியா இதுவரை யார் மீதும் வன்முறையில் ஈடுபட்டதில்லை. இருப்பினும் இதர நாடுகள் நம்மீது போர் தொடுத்துள்ளது. 

ஒவ்வொருவரும் தங்கள் தாய்மொழியை கட்டாயம் கற்க வேண்டும். அதுதான் நமது பூர்வீகம். தாய்மொழி தெரிந்தால் மட்டுமே நமது வாழ்க்கை முறையும், கலாசாரமும், பண்பாடும் தெரியும்.

வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்தியா அனைத்து துறைகளிலும் சிறப்பாகச் செயல்படும் விதமாக நம்மை தயார்படுத்திக்கொள்வது அவசியமாகும். பிரதமர் நரேந்திர மோடி கடின உழைப்பாளி. அவர் இந்த இடத்துக்கு முன்னேற அதுவே காரணம். தற்போது உலகின் சிறந்த மனிதர்களில் ஒருவராக மோடி உள்ளதாகத் தெரிவித்தார்.

முன்னதாக, பாஜக-வில் இருந்த வெங்கய்ய நாயுடு, தீவிர அரசியலில் இருந்து ஜுலை 17-ந் தேதி ஒதுங்கினார். இருப்பினும் தனது பொதுவாழ்வை தொடரும் விதமாக ஆகஸ்டு 5-ந் தேதி நடந்த துணைக் குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இதன்மூலம் இந்தியாவின் தற்போதைய துணைக் குடியரசுத்தலைவராக செயல்பட்டு வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com