கர்நாடகப் பேரவையின் கூட்டத் தொடர்: அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் எங்கே போயினர்?

கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று வெறும் 113 பேரவை உறுப்பினர்களுடன் தொடங்கியது.
கர்நாடகப் பேரவையின் கூட்டத் தொடர்: அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் எங்கே போயினர்?


பெலகாவி : கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று வெறும் 113 பேரவை உறுப்பினர்களுடன் தொடங்கியது.

பெலகாவி சுவர்ண சௌதாவில் கர்நாடக மாநில சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடர் திங்கட்கிழமை தொடங்கியது.

சுமார் 300 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் நேற்று காலை கூட்டத் தொடர் தொடங்கியபோது வெறும் 113 பேர் மட்டுமே வருகை தந்திருந்தனர். 

பேரவையின் 80 சதவீத இருக்கைகள் காலியாகவே இருந்ததால், கூட்டத் தொடர் தொடங்குவது 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது.

அப்போதும் பெரிய அளவில் வருகை இல்லாததால், சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது. கூட்டத் தொடரின் முதல் நாள் என்பதால், எந்த விவாதங்களும் எடுத்துக் கொள்ளப்படாது. 

9 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத் தொடரின் முதல் நாளில், மரணமடைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்துவிட்டு அவை ஒத்திவைக்கப்படுவது வழக்கம். 

ஆனாலும், கூட்டத் தொடரின் முதல் நாளில் அவைக்கு வருகை தந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடுவது அவசியம்.

அதோடு, அனைத்து உறுப்பினர்களும் கூட்டத் தொடரில் பங்கேற்பார்கள் என்பதற்காக, அவர்களது அறைகளும் தயார் செய்யப்பட்டு, அவர்களுக்கு மதிய உணவுகளும் தயாரிக்கப்படும். இவை அல்லாமல், மக்களின் பிரதிநிதிகளான ஒவ்வொரு எம்எல்ஏக்களுக்கும், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்க ரூ.2,000 வழங்கப்படுகிறது. கூட்டத் தொடரில் பங்கேற்காவிட்டால், இந்தத் தொகை வழங்கப்படுமா என்பது உறுதி செய்யப்படவில்லை.

பேரவையில் பங்கேற்க வேண்டிய அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் எங்கே போயினர் என்ற கேள்வி ஊடகங்களில் எழுந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com