தில்லியில் பள்ளிகள் மீண்டும் திறப்பு: பெற்றோர்கள் அதிருப்தி

தில்லியில் கடுமையான காற்று மாசு காரணமாக கடந்த வாரம் மூடப்பட்ட பள்ளிகள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. காற்று மாசு நீடித்து வரும் நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதற்கு
தில்லியில் பள்ளிகள் மீண்டும் திறப்பு: பெற்றோர்கள் அதிருப்தி

தில்லியில் கடுமையான காற்று மாசு காரணமாக கடந்த வாரம் மூடப்பட்ட பள்ளிகள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. காற்று மாசு நீடித்து வரும் நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதற்கு பெற்றோர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தலைநகரில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி கடுமையான காற்று மாசு நீடித்து வருகிறது. இதன் காரணமாக, நகரிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 4 நாள்கள் விடுமுறை அளித்து, தில்லி அரசு கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. காற்று மாசு அபாகரமான அளவில் நீடிக்கும் சூழலில், பள்ளிகள் திறக்கப்பட்டிருப்பது, பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அகில இந்திய பெற்றோர்கள் சங்கத் தலைவர் அசோக் அகர்வால் கூறுகையில், "தில்லியில் காற்று மாசு குறையாத போதிலும், பள்ளிகள் திறக்கப்பட்டது ஏன்? ஒரு புறம் சுகாதார அவசரநிலை ஏற்பட்டுள்ளதாக கூறும் தில்லி அரசு, மற்றொரு புறம் குழந்தைகளின் நலனில் அலட்சியத்துடன் செயல்படுகிறது. பள்ளிகளுக்கு செல்லும் வழியில், காற்று மாசு காரணமாக குழந்தைகள் இருமுவதையும், சுவாசிக்க சிரமப்படுவதையும் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது என்றார் அவர். இதே கருத்தை, மேலும் பல பெற்றோர்களும் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக இந்திய மருத்துவ சங்கத் தலைவர் அஜய் லேகி கூறுகையில், "காற்று மாசுவால், பெரியவர்களைவிட குழந்தைகள்தாம் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெரியவர்களைவிட, குழந்தைகள் சுவாசிப்பதற்கு அதிக அளவில் காற்று தேவை. நுரையீரல் வளரும் பருவத்தில் இருப்பதால், காற்று மாசு குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது' என்றார்.

உலகிலேயே காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் ஒன்றாக தில்லி இருக்கிறது. இங்கு வசிக்கும் 10 குழந்தைகளில் 4 குழந்தைகள் தீவிர நுரையீரல் பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று கடந்த 2015-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com