ரசகுல்லா யாருக்குச் சொந்தம்? புவிசார் குறியீடு போட்டியில் வெற்றி பெற்ற மேற்கு வங்கம்! 

பெரும்பாலான மக்களின் அபிமானத்துக்குஉரிய இனிப்பு வகைகளில் ஒன்றான ரசகுல்லா மேற்கு வங்கத்திற்கு உரியது என தீர்மானிக்கப்பட்டு புவிசார் குறியீட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ரசகுல்லா யாருக்குச் சொந்தம்? புவிசார் குறியீடு போட்டியில் வெற்றி பெற்ற மேற்கு வங்கம்! 

கொல்கத்தா: பெரும்பாலான மக்களின் அபிமானத்துக்குஉரிய இனிப்பு வகைகளில் ஒன்றான ரசகுல்லா மேற்கு வங்கத்திற்கு உரியது என தீர்மானிக்கப்பட்டு புவிசார் குறியீட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் விரும்பி உண்ணும் இனிப்புகளில் ரசகுல்லாவும் ஒன்று. இது யாருக்கு சொந்தம் என்பதில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது.

இதன் காரணம் என்னவென்றால் ரசகுல்லா என்னும் பண்டம் 1868ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் அப்பொழுது கல்கத்தா என அழைக்கப்பட்ட நகரில்தான் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. கொல்கத்தா நகரின் வடக்கு பகுதியைச் சேர்ந்தவரான நொபின் சந்திர தாஸ் என்பவர் இதன் செய்முறையோடு அறிமுகப்படுத்தியுள்ளார். இன்று வரையிலும் கூட நொபினின் வாரிசுகள் கொல்கத்தா வடக்கு பகுதியில்  கடையில் ரசகுல்லா விற்பனை செய்து வருகின்றனர்.

அதேநேரம் ஒடிசாவின் பூரி நகரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஜெகன்னாதர் கோயிலில் இறைவனுக்கு பிரசாதமாக தினமும் ரசகுல்லா படைக்கப்படுகிறது. எனவே ரசகுல்லா உரிமை தங்களது மாநிலத்திற்குதான் உள்ளது என்று ஒடிசா நீண்ட நாட்களாக உரிமைக்கு குரல் எழுப்பி வருகிறது.

எனவே ரசகுல்லாவிற்கான புவிசார் குறியீடு யாருக்கு வழங்கப்படுவது என்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவி வந்தது. கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து இந்த பிரச்னை தொடர்ந்து இழுபறியில் இருந்து வருகிறது.

மேற்கு வங்காளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு மம்தா பானர்ஜி அரசு மீண்டும் பொறுப்பேற்ற பின்னர் ரசகுல்லா, சீதாபோக் மற்றும் மிஹிதனா ஆகிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் பெறுவதற்கு தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தன.

அந்த முயற்சிகளின் பயனாக மேற்கு வங்கத்திற்கு ரசகுல்லாவிற்கான புவிசார் குறியீட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து தனது மகிழ்ச்சியினை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com