அயோத்தி பேச்சுவார்த்தைகளில் மத்திய அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் குறிப்பிட்ட நிலம் தொடர்பாக நிலவும் பிரச்னைக்குத் தீர்வு காண்பது குறித்து நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் மத்திய அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை
அயோத்தி பேச்சுவார்த்தைகளில் மத்திய அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் குறிப்பிட்ட நிலம் தொடர்பாக நிலவும் பிரச்னைக்குத் தீர்வு காண்பது குறித்து நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் மத்திய அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலப்பகுதி தொடர்பாக நிலவும் பிரச்னைக்கு தீர்வு காண உதவி செய்யத் தயாராக இருப்பதாக வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர் தெரிவித்திருந்தார். அயோத்திக்கு வரும் 16-ஆம் தேதி சென்று, சம்பந்தப்பட்ட தரப்பினரை சந்தித்துப் பேச இருப்பதாகவும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குறிப்பிட்டிருந்தார்.
இதை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்திருந்தது. வாழும் கலை அமைப்பின் தலைவரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மத்திய அரசின் ஏஜெண்ட்டாக செயல்படுகிறார் என்று அக்கட்சி குற்றம்சாட்டியிருந்தது.
இதுகுறித்து மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியிடம் செய்தியாளர்கள் செவ்வாய்க்கிழமை கேள்வியெழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிடவில்லை. அதேபோல், இந்தப் பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் மத்திய அரசு பங்கு வகிக்கவில்லை.
பிரச்னைக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும். இதுதவிர, மத்திய அரசு வேறு எதையும் விரும்பவில்லை.
அமைதிப் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லையெனில், அதுகுறித்து நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார் நக்வி.
ஹஜ் யாத்திரை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் பதில் அளிக்கையில், 'தனியார் மூலம் ஹஜ் யாத்திரை செல்வதற்கு யாத்ரீகர்கள் ஏராளமானோர் விருப்பம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கான ஹஜ் ஒதுக்கீட்டை 5 சதவீதத்தில் இருந்து மேலும் அதிகரிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது' என்றார். எனினும், தனியார் நிறுவனத்தினருக்கான ஹஜ் யாத்திரை ஒதுக்கீடு எத்தனை சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறித்து நக்வி தெரிவிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com