இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கென்னத் ஜஸ்டர் பொறுப்பேற்பு

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக கென்னத் ஜஸ்டர் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கென்னத் ஜஸ்டர் பொறுப்பேற்பு

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக கென்னத் ஜஸ்டர் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதற்கு முன்னர் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக இருந்த ரிச்சர்ட் வர்மா, டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டதையடுத்து தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதனால், கடந்த ஜனவரி 20-ஆம் தேதி முதல் காலியாக இருந்த அப்பதவிக்கு, கென்னத் ஜஸ்டரை நியமிப்பதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் இந்த மாதம் 2-ஆம் தேதி ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில் அவர் அந்தப் பொறுப்பை திங்கள்கிழமை ஏற்றார். அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வவைத்த அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவுக்கான புதிய தூதராகியுள்ள கென்னத் ஜஸ்டருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்குமான நெருக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவுக்கான தூதராகியுள்ள கென்னத் ஜஸ்டர் அந்த நல்லுறவை மேலும் வலுப்படுத்துவார் என்று தனது பதிவில் மைக் பென்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
62 வயதாகும் கென்னத், பொருளாதாரத் துறையில் சிறந்த அனுபவம் பெற்றவராவார். அவர் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
சமீப ஆண்டுகளாக இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கமாகியுள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கு புதிய தூதர் நியமிக்கப்படுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com