ஒடிஸா: மாணவர்களுக்கு புதிய கல்வி நிதியுதவித் திட்டங்கள் 

குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தையொட்டி மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கல்வி நிதியுதவித் திட்டங்களை ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்தார்.

குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தையொட்டி மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கல்வி நிதியுதவித் திட்டங்களை ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்தார்.
புவனேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான குழந்தைகள் தின விழாவில் அவர் பேசியது:
ஒடியா மொழி மேம்பாட்டுக்காகவும் அந்த மொழியின் மீதான ஆர்வத்தை மாணவர்கள் மத்தியில் புகுத்தவும், ஒவ்வொரு வட்டத்திலும் ஒடியா மொழிப் பாடத்தில் சிறந்த மதிப்பெண்களைப் பெறும் 10 மாணவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். அதேபோல், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெறும் 40 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு தலா ரூ.5 ஆயிரம் கல்வி உதவித் தொகை அளிக்கப்படும். 
மேலும் பள்ளிகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்களை இணைக்கும் முயற்சியை அந்தந்தப் பள்ளிகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வட்டத்திலும் மிகச் சிறந்த முறையில் செயல்படும் மூன்று பள்ளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு அளிக்கப்படும்.
கல்வி மட்டும்தான் நாம் அனைவரையும் வளர்ச்சியின் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும். தரமான கல்வியை குறிவைத்து நாம் செயல்பட வேண்டும். அப்போதுதான் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நமது மாநிலத்தைக் கொண்டு செல்ல இயலும். ஓர் இயக்கம் போல் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டதால் இது நடக்கும்.
மேலும் தங்களது கனவுகளை நனவாக்கிக் கொள்ள மாணவர்கள் கடினமாக உழைத்து நன்றாகப் படிக்க வேண்டும். பெற்றோர்களின் தார்மிக பொறுப்பை ஏற்று சமூகம், மாநிலம், நாட்டுக்காக என அனைத்துக்கும் மாணவர்கள் அரும்பாடுபட வேண்டும் என்று நவீன் பட்நாயக் பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com