காற்று மாசு: ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளிக்க புதிய செயல்திட்டம்: தில்லி அரசு முடிவு

காற்று மாசு: ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளிக்க புதிய செயல்திட்டம்: தில்லி அரசு முடிவு

தில்லியில் நிலவி வரும் கடுமையான காற்று மாசுவை கட்டுப்படுத்துவதற்காக, ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளிப்பது குறித்து புதிய செயல்திட்டத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.

தில்லியில் நிலவி வரும் கடுமையான காற்று மாசுவை கட்டுப்படுத்துவதற்காக, ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளிப்பது குறித்து புதிய செயல்திட்டத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் இம்ரான் ஹூசைன் கூறியதாவது:
தில்லியில் காற்று மாசுவை குறைப்பதற்காக ஹெலிகாப்டர் மூலம் நீர் தெளிப்பது குறித்து பவான் ஹேன்ஸ் ஹெலிகாப்டர் நிறுவனத்துடன் தில்லி அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதுதொடர்பாக தில்லி அரசு எழுதிய கடிதத்துக்கு பதிலளித்துள்ள அந்த நிறுவனத்தின் பொது மேலாளர் (வர்த்தகப் பிரிவு) வன்ராஜ்சிங் தோடியா, மேற்கண்ட பணிக்கு தங்களது நிறுவனம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள், மத்திய அரசின் பல்வேறு துறை அதிகாரிகள், தில்லி அரசு அதிகாரிகள் பங்கேற்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளிப்பது தொடர்பாக புதிய செயல்திட்டத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது என்றார் அவர்.

தில்லியில் கடுமையான காற்று மாசு நீடித்து வரும் நிலையில், காற்றில் பரவியுள்ள தூசுகளை படிய வைப்பதற்காக வான்வழியாக தண்ணீர் தெளிப்பது குறித்த யோசனையை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அண்மையில் தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com