சர்வதேச நீதிமன்ற நீதிபதி தேர்வு: இந்தியரைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல்

சர்வதேச நீதிமன்ற நீதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக ஐ.நா.வில் நடைபெற்ற வாக்கெடுப்பில், இந்தியாவின் சார்பில் போட்டிடும் தல்வீர் பண்டாரியை ஐ.நா. பொதுச் சபை தேர்ந்தெடுத்தாலும்

சர்வதேச நீதிமன்ற நீதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக ஐ.நா.வில் நடைபெற்ற வாக்கெடுப்பில், இந்தியாவின் சார்பில் போட்டிடும் தல்வீர் பண்டாரியை ஐ.நா. பொதுச் சபை தேர்ந்தெடுத்தாலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் குறைந்த வாக்குகளை அளித்ததால் அவர் நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் செயல்பட்டு வரும் ஐ.நா.வின் நீதித்துறைப் பிரிவான சர்வதேச நீதிமன்றத்தில் 15 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உள்ளது. 6 ஆண்டு பதவிக் காலம் உடைய அந்த நீதிபதிகள், ஐந்தைந்து பேராக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐ.நா. பொதுச் சபை மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
அந்த வகையில், கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நீதிபதிகள் தேர்வில் பிரான்ஸைச் சேர்ந்த ரோனி ஆபிரஹாம், சோமாலியாவைச் சேர்ந்த அப்துல்காவி அகமது யூசுஃப், பிரேசில் நாட்டின் அன்டோனியோ அகஸ்டோ, லெபனானின் நவாஃப் சலாம் ஆகிய நான்கு பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
எனினும், கடைசி ஒரு இடத்துக்காக இந்தியாவின் சார்பில் தல்வீர் பண்டாரியும், பிரிட்டனின் சார்பில் கிறிஸ்டோஃபர் கிரீன்வுட்டும் போட்டியிட்டனர். அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நியூயார்க்கிலுள்ள ஐ.நா. பொதுச் சபையிலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிலும் தனித்தனியாக திங்கள்கிழமை நடைபெற்றது.
பாதுகாப்புக் கவுன்சிலில் நடைபெற்ற வாக்கெடுப்பில், கிரீன்வுட்டுக்கு 9 வாக்குகளும், பண்டாரிக்கு 5 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து, பாதுகாப்பு கவுன்சிலில் வெற்றி பெறத் தேவையான 8-க்கும் அதிக வாக்குகளை கிரீன்வுட் பெற்றார். ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், பண்டாரிக்கு பெரும்பான்மையாக 115 வாக்குகள் கிடைத்தன. கிரீன்வுட்டுக்கு 68 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
எனினும், பாதுகாப்பு கவுன்சில் வாக்கெடுப்பில் குறைந்த வாக்குகளைப் பெற்றதால் தல்வீர் பண்டாரியை நீதிபதியாகத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த வாக்கெடுப்பு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
சசி தரூர் கண்டனம்: இதற்கிடையே, ஐ.நா. பொதுச் சபையில் பெருவாரியான வாக்குகள் பெற்றும், தல்வீர் பண்டாரி சர்வதேச நீதிமன்ற நீதிபதி ஆக முடியாதது, ஐ.நா. பொதுச் சபையின் குரலை பாதுகாப்பு கவுன்சில் மதிப்பதில்லை என்பதையே காட்டுவதாக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சசி தரூர் குற்றம் சாட்டியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com