சல்மான் கான் விடுதலையை எதிர்த்து மகாராஷ்டிர அரசு வழக்கு: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

குடிபோதையில் காரை ஓட்டிவந்து நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், ஹிந்தி நடிகர் சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மகாராஷ்டிர அரசு தாக்கல்
சல்மான் கான் விடுதலையை எதிர்த்து மகாராஷ்டிர அரசு வழக்கு: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

குடிபோதையில் காரை ஓட்டிவந்து நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், ஹிந்தி நடிகர் சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை 3 மாதங்களுக்குப் பிறகு விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
மும்பையின் பாந்த்ரா பகுதியில் கடந்த 2002-ஆம் ஆண்டு நேரிட்ட இந்த விபத்தில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், சல்மான் கானை விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது, சல்மான் கானின் பதிலைக் கேட்டு, அவருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், 'இந்த மனுவை முன்பு விசாரித்த அமர்வு, மாநில அரசுக்கு 3 மாதங்கள் அவகாசம் அளித்துள்ளது. ஆதலால், இந்த மேல்முறையீட்டு மனுவை 3 மாதங்களுக்குப் பிறகு விசாரிக்க ஒப்புக் கொள்கிறோம்' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com