சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்த வேண்டாம் என ஹரியாணா அரசு கோரியது: பிரத்யுமன் தந்தை

குர்கானில் உள்ள ராயன் சர்வதேச பள்ளியில்  2ம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்த வேண்டாம் என ஹரியாணா அரசு கேட்டுக் கொண்டதாக மாணவனின் தந்தை கூறியுள்ளார்.
சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்த வேண்டாம் என ஹரியாணா அரசு கோரியது: பிரத்யுமன் தந்தை


குர்கானில் உள்ள ராயன் சர்வதேச பள்ளியில்  2ம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்த வேண்டாம் என ஹரியாணா அரசு கேட்டுக் கொண்டதாக மாணவனின் தந்தை கூறியுள்ளார்.

ராயன் பள்ளியின் 2ம் வகுப்பு மாணவன் பிரத்யுமன் தாக்கூர் (7) படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதலில் பள்ளியின் பேருந்து ஓட்டுநரின் உதவியாளர் கைது செய்யப்பட்டார். பாலியல் ரீதியாக துன்புறுத்தி பிரதியுமனை கொலை செய்ததாக, குர்கான் காவல்துறையினரால் அசோக் குமார் கைது செய்யப்பட்டார்.

ஆனால், வழக்கை சிபிஐ விசாரித்த பிறகு, பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவன் தான் இந்த கொலையில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மாணவன் கைது செய்யப்பட்டான். 

பள்ளி நிர்வாகமும், காவல்துறையும் சேர்ந்தே இந்த கொலை வழக்கை திசை திருப்பியதாக கடும் விமரிசனங்கள் எழுந்தன. இது குர்கான் காவல்துறைக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், கொலை செய்யப்பட்ட மாணவனின் தந்தை வருண் தாக்கூர் மற்றொரு பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஏஎன்ஐக்கு தாக்கூர் அளித்த பேட்டியில், ஹரியாணா அமைச்சர் ராவ் நர்பிர் சிங், தங்களிடம் வந்து, சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்த வேண்டாம். சிபிஐ விசாரணை அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்ளும். மாநில காவல்துறையின் விசாரணையை நம்புங்கள் என்று வலியுறுத்தியதாகக் கூறியுள்ளார்.

இது குறித்து பதிலளித்துள்ள அமைச்சர் நர்பிர் சிங், சம்பவம் நடந்த அன்றே வழக்கை சிபிஐக்கு மாற்றி அரசால் உத்தரவிட முடியாது. காவல்துறை விசாரணை நடத்தட்டும், ஒரு வார காலம் ஆன பிறகு, விசாரணையில் திருப்தியில்லை என்றால் சிபிஐக்கு பரிந்துரைக்கலாம் என்றுதான் கூறியதாக விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில், பிரத்யுமன் கொலை வழக்கில் காவல்துறையினால் கைது செய்யப்பட்ட அசோக் குமார் விரைவில் விடுதலையாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com