நில அபகரிப்பு குற்றச்சாட்டு எதிரொலி: கேரள அமைச்சர் தாமஸ் சாண்டி ராஜிநாமா! 

ஏரி நிலத்தை ஆக்கிரமித்ததாக எழுந்த புகாரில் கேரள அரசில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரûஸச் சேர்ந்த அமைச்சர் தாமஸ் சாண்டி தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
நில அபகரிப்பு குற்றச்சாட்டு எதிரொலி: கேரள அமைச்சர் தாமஸ் சாண்டி ராஜிநாமா! 

திருவனந்தபுரம்: ஏரி நிலத்தை ஆக்கிரமித்ததாக எழுந்த புகாரில் கேரள அரசில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரûஸச் சேர்ந்த அமைச்சர் தாமஸ் சாண்டி தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

கேரள மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராக இருப்பவர் தாமஸ் சாண்டி. சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்தவரான அவர் மீது, நட்சத்திர விடுதி ஒன்றின் வாகன நிறுத்தத்துக்காக ஏரி நிலத்தை ஆக்கிரமித்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகப் புகார் எழுந்தது.

ஆலப்புழை மாவட்ட ஆட்சியர் டி.வி.அனுபமா அந்தப் புகாரை முன்வைத்திருந்தார். இதையடுத்து அதுகுறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகாக மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகரின் கருத்தறியப்பட்டது. அவர் அளித்த அறிக்கையின்படி மாநில அரசு செயல்படும் எனத் தெரிகிறது.

அதேநேரம் சாண்டி ராஜிநாமா செய்ய வேண்டுமென்ற கோரிக்கையினை எதிர்கட்சிகள்  தொடந்து வலியுறுத்தி வந்தன. 

இந்த சூழலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் டி.பி.பீதாம்பரன் திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் சாண்டியின் ராஜிநாமா கடிதம்  முதல்வர் பினராயி விஜயனிடம் அளிக்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்தார்.

பின்னர் தனது அலுவலத்தில் இருந்து பினராயி விஜயன் புறப்பட்ட பொழுது சாண்டியின் ராஜிநாமா கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டு விட்டதாகத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com