ம.பி. இடைத் தேர்தலில் தோல்வி: பாஜக மீது சிவசேனை விமர்சனம்

மத்தியப் பிரதேச மாநிலம் சித்ரகூட் தொகுயில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததை அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனை விமர்சித்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் சித்ரகூட் தொகுயில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததை அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனை விமர்சித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தும் காங்கிரஸ் இல்லாத தேசத்தை பாஜகவால் உருவாக்க முடியவில்லை என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் சித்ரகூட் சட்டப் பேரவைத் தொகுதிக்கு அண்மையில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் ஆளும் பாஜக வெற்றி பெறும் என்றே கருதப்பட்டது. மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான், உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளரியா உள்ளிட்டோர் அந்தத் தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். இருந்தபோதிலும், காங்கிரஸ் வேட்பாளர் 14,000 வாக்கு வித்தியாசத்தில் அங்கு வெற்றி பெற்றார். இந்நிலையில், இதுதொடர்பாக சிவசேனை, தனது அதிகாரப்பூர்வ நாளேடான 'சாம்னா'வில் தலையங்கக் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது:
பஞ்சாபின் குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தல், மகாராஷ்டிரத்தின் நாந்தேட் மாநகராட்சித் தேர்தல் ஆகியவற்றில் காங்கிரஸிடம் பாஜக தோல்வியைத் தழுவியது. தற்போது, சித்ரகூட் தொகுதியிலும் அது தொடர்கிறது. பாஜகவின் தோல்விகள் கவலையளிக்கின்றன. 
கடந்த 3 ஆண்டுகளாக பாடுபட்டும் பாஜகவால் காங்கிரஸ் இல்லாத தேசத்தை உருவாக்க இயலவில்லை என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com