ராகுலை கேலி செய்யும் பாஜகவின் விளம்பரத்துக்கு தேர்தல் ஆணையம் தடை

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை கேலி செய்யும் விதமாக 'பப்பு' (சிறுவன்) என்ற வார்த்தையைப் பயன்படுத்தி குஜராத்தில் பாஜக சார்பில் தயாரிக்கப்பட்ட தேர்தல் பிரசார விடியோவுக்கு

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை கேலி செய்யும் விதமாக 'பப்பு' (சிறுவன்) என்ற வார்த்தையைப் பயன்படுத்தி குஜராத்தில் பாஜக சார்பில் தயாரிக்கப்பட்ட தேர்தல் பிரசார விடியோவுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
சமுக வலைதளங்களில் ராகுல் காந்தியை 'பப்பு' என்று வார்த்தையைப் பயன்படுத்தி பாஜகவினர் கேலி செய்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு தொலைக்காட்சியில் ஒரு விளம்பரப் படத்தையும், வானொலியில் ஒரு விளம்பரத்தையும் ஒளி, ஒலிபரப்ப தேர்தல் ஆணையத்திடம் பாஜக அனுமதிகோரியது. அதில் பப்பு என்ற வார்த்தை இடம் பெற்றிருந்தது. அந்த வார்த்தை மரியாதைக்குறைவாக உள்ளது என்று கூறி அதற்கு அனுமதி அளிக்க தேர்தல் ஆணையத்தின் ஊடகப் பிரிவு மறுத்துவிட்டது. 
இது தொடர்பாக பாஜக சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், பப்பு என்ற வார்த்தையை யாரையும் குறிப்பிட்டு பாஜக பயன்படுத்தவில்லை. தேர்தல் ஆணையம் அந்த வார்த்தைக்கு தடை விதித்துள்ளதால், வேறு வார்த்தையை அந்த இடத்தில் பயன்படுத்தி மீண்டும் அனுமதி கோருவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com