ரூ.121 கோடி ஊழல்: அஸ்ஸாமில் ஐஏஎஸ் அதிகாரி கைது

அஸ்ஸாம் மாநில அரசுக்காக துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டதில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக, ஐஏஎஸ் அதிகாரி சோஹான் டேலே என்பவரை அந்த மாநில முதல்வரின் சிறப்பு ஊழல் தடுப்புப் பிரிவு

அஸ்ஸாம் மாநில அரசுக்காக துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டதில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக, ஐஏஎஸ் அதிகாரி சோஹான் டேலே என்பவரை அந்த மாநில முதல்வரின் சிறப்பு ஊழல் தடுப்புப் பிரிவு (எஸ்விசி) செவ்வாய்க்கிழமை கைது செய்தது.
இதுகுறித்து எஸ்விசி பிரிவின் காவல்துறை கண்காணிப்பாளர் கனீந்திர குமார் செளத்ரி, குவாஹாட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2013-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை அஸ்ஸாம் மாநில தொழிலாளர் நல ஆணையராக சோஹான் டோலே இரு முறை பொறுப்பு வகித்தார்.
அப்போது, தொழிலாளர் நலத் துறை சார்பாக துண்டுப் பிரசுரங்கள் அச்சடிப்பதற்காக தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கிய வகையில் ரூ.121 கோடி வரை முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தற்போது பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புறச் செயலராகப் பணியாற்றி வரும் சோஹான் டோலேவை செவ்வாய்க்கிழமை கைது செய்தோம். அவரை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம்.
இந்த வழக்கு தொடர்பாக, பியாங்ஷு பைராகி நிறுவனத்தின் உரிமையாளரையும் கைது செய்துள்ளோம். இந்த முறைகேடு குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால் தற்போது மேற்கொண்டு எந்த விவரமும் தெரிவிக்க முடியாது என்றார் அவர்.
ஊழலுக்கு எதிராக அஸ்ஸாம் மாநில முதல்வரின் சிறப்பு ஊழல் தடுப்புப் பிரிவு எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சோஹான் டோலே கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 6 நாள்களில் மட்டும் அரசுப் பணியாளர் நியமன ஊழல் தொடர்பாக 22 அதிகாரிகளை அந்தப் பிரிவு அமைப்பு கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com