குஜராத் தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
குஜராத் தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

குஜராத் மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதையடுத்து, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தொடர்ந்து அங்கு ஆட்சியைத் தக்க வைக்க பாஜக கடுமையாக முயற்சித்து வருகிறது. அதுபோல மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் போராடி வருகிறது.

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் ஆகியோர் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் தேர்வு தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆலோசித்து வந்தது.

இந்நிலையில், பாஜக தலைவர் அமித்ஷா தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பலர் பங்கேற்ற அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் பாஜக தலைமையகத்தில் நடைபெற்றது.

இதையடுத்து, குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 70 பேர் கொண்ட முதல்கட்டப் பட்டியலை பாஜக வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதனை அந்த கூட்டத்தில் உள்ள விஜய் ரூபானி, நிதின்பாய் படேல் உள்ளிட்டோர் அடங்கிய குழு தேர்வு செய்தது.

இதனிடையே, குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com