குஜராத் தேர்தல்: 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

குஜராத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக சனிக்கிழமை வெளியிட்டது.
குஜராத் தேர்தல்: 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

குஜராத் மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இதையடுத்து, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தொடர்ந்து அங்கு ஆட்சியைத் தக்க வைக்க பாஜக கடுமையாக முயற்சித்து வருகிறது. அதுபோல மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் போராடி வருகிறது.

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் ஆகியோர் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். 

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் தேர்வு தொடர்பாக அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் பாஜக தலைமையகத்தில் நடைபெற்றது.

இதையடுத்து, குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 70 பேர் கொண்ட முதல்கட்டப் பட்டியலை பாஜக வெள்ளிக்கிழமை வெளியிட்டது. 

இந்நிலையில், 36 வேட்பாளர்களைக் கொண்ட 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக சனிக்கிழமை (இன்று) வெளியிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com