கட்சி வேறுபாடுகளை மறந்து மக்கள் பணியாற்ற வேண்டும்

கட்சி வேறுபாடுகளை மறந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென்று எம்எல்ஏக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
கட்சி வேறுபாடுகளை மறந்து மக்கள் பணியாற்ற வேண்டும்

கட்சி வேறுபாடுகளை மறந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென்று எம்எல்ஏக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
 அருணாசலப் பிரதேசத் தலைநகர் இடாநகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சட்டப் பேரவைக் கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து அவர் பேசியதாவது:
 இங்கு திறக்கப்பட்டுள்ள புதிய சட்டப் பேரவையை செங்கற்களாலும், சிமெண்டாலும் கட்டப்பட்ட வெறும் கட்டடம் என்று கருதக் கூடாது. மாநிலத்தின் நலனுக்காகவும், மக்களின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்காகவும் அமைக்கப்பட்ட முக்கிய மையமாகக் கருத்த வேண்டும்.
 பெரும் நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புகளுடனும் மக்கள் உங்களைத் தேர்வு செய்து சட்டப் பேரவைக்கு அனுப்பியுள்ளனர். அவர்களின் எண்ணங்களை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எம்எல்ஏக்கள் அனைவருக்கும் உண்டு. நலத் திட்டங்களைச் செயல்படுத்தும்போது கட்சி வேறுபாடுகளை மறந்து செயல்பட வேண்டும். மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைப் பாராமல் தீர்த்து வைப்பதே சிறந்த மக்கள் பிரதிநிதியின் கடமை. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஆக்கபூர்வமாக விவாதம் நடத்தி மாநில நலன் சார்ந்த அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டும். எம்எல்ஏக்களிடையே சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதனால் பேரவையில் பிரச்னை ஏற்படக் கூடாது. ஜனநாயகத்தின் மாண்பைக் காக்கும் பொறுப்பு எம்எல்ஏக்களுக்கு உண்டு.
 வடகிழக்குப் பிராந்தியம் இந்தியாவின் மணிமகுடமாகக் காட்சியளிக்கிறது. அந்த மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட வைரமாக அருணாசலப் பிரதேசம் திகழ்கிறது என்றார் அவர்.
 4 நாள் பயணமாக வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்றுள்ள ராம்நாத் கோவிந்த் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com