குஜராத் தேர்தலில் ஆர்ஜேடி போட்டியில்லை: காங்கிரஸுக்கு ஆதரவு

""குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சி போட்டியிடவில்லை; காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்கிறது'' என்று அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
குஜராத் தேர்தலில் ஆர்ஜேடி போட்டியில்லை: காங்கிரஸுக்கு ஆதரவு

""குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சி போட்டியிடவில்லை; காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்கிறது'' என்று அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து பிகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
 குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆர்ஜேடி ஆதரவளிக்கிறது. எங்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் யாரும் அங்கு நிறுத்தப்படவில்லை.
 குஜராத் தேர்தலில், பாஜக தோல்வியடைவதை உறுதிசெய்யும் வகையில், அக்கட்சியை எதிர்த்து, சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள், விவசாயிகள், தொழிலாளர்கள், யாதவ சமுதாயத்தினர் ஆகியோர் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
 குஜராத்துக்கு நான் வர வேண்டும் என்று படேல் சமூக போராட்டத்துக்கு தலைமை வகிக்கும் ஹார்திக் படேல் கேட்டுக் கொண்டுள்ளார். எனக்கு நேரம் இருந்தால், குஜராத்துக்கு நான் செல்வேன் என்றார் லாலு பிரசாத் யாதவ்.
 முன்னதாக, பாட்னாவில் நடைபெற்ற ஆர்ஜேடி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் லாலு பிரசாத் பேசியபோது, குஜராத் தேர்தலில் படேல் சமூகத்தினர் வாக்குகளில் பிளவு ஏற்படுத்தும் திட்டத்துடனேயே, ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிதீஷ் குமார் நிறுத்தியிருப்பதாக குற்றம்சாட்டினார். அவர் மேலும் பேசுகையில், "மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு, நாட்டில் இருந்து பாஜகவை அடியோடு அகற்ற வலியுறுத்தி, ஆர்ஜேடி கட்சி சார்பில் "மாற்றம்' என்ற பேரணி நடத்தப்படும். மத்திய அமைச்சர்கள் அனைவரும் எனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதையே கொள்கையாகக் கொண்டு செயல்படுகின்றனர்.
 பிகாரில் இருந்து மக்களவைக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் எம்.பி.க்களாக தற்போது தேர்வு செய்யப்பட்டவர்கள் யாரும் அடுத்த முறை வெற்றி பெறக் கூடாது. அனைவரையும் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்றார் லாலு.
 ஆர்ஜேடி கட்சியின் தலைவராக லாலு பிரசாத் யாதவ் கடந்த 14-ஆம் தேதி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்ஜேடி தேசிய கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட இருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com