சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்த உ.பி. அரசு உறுதிபூண்டுள்ளது; யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்த தனது அரசு உறுதிபூண்டுள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்த உ.பி. அரசு உறுதிபூண்டுள்ளது; யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்த தனது அரசு உறுதிபூண்டுள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
 உத்தரப் பிரதேசத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, அலிகர் நகரில் பாஜக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:
 இந்த மாநிலத்தில் முந்தைய ஆட்சிகளின்கீழ் ஒவ்வொரு வாரமும் கலவரங்கள் நிகழ்ந்து வந்தன. கலவரங்களில் ஈடுபட்டு வந்தவர்களைக் கைது செய்ய அந்த ஆட்சிகள் தவறிவிட்டன. உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தபோது இங்கு அராஜகமும், குண்டர்கள் ராஜ்யமும் கொடிகட்டிப் பிறந்தது. எனினும், இந்த ஆட்சி அமைந்த கடந்த 8 மாதங்களில் மாநிலத்தில் மதக் கலவரம் எதுவும் நடைபெறவில்லை.
 தற்போது கைரானா நகரில் இருந்து குறிப்பிட்ட சமூகத்தினர் முன்பு ஆயிரக்கணக்கில் வெளியேறியதைப் போன்ற சம்பவங்கள் நிகழ்வதில்லை. கைரானாவில் குற்றவாளிகள் மற்றும் மாஃபியாக்களின் மிரட்டலைத் தொடர்ந்து மக்கள் குறிப்பாக வர்த்தகர்கள் கும்பல் கும்பலாக வெளியேறினர். யாரும் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படாது. தற்போது, எந்தவொரு வர்த்தகரையும் யாரும் மிரட்ட முடியாது; யாரையும் கடத்திச் செல்லவும் முடியாது.
 நாதங்கள் மேற்கொண்ட கடுமையான அணுகுமுறையானது நல்ல பலன்களை அளித்து வருகிறது. வெளிநாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் இந்த மாநிலத்தில் முதலீடு செய்ய தயாராக உள்ளனர்.
 முதலீடுகள், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும். உத்தரப் பிரதேசத்தை விட்டு வெளியேற்றறிய வர்த்தகர்கள் தற்போது திரும்பி வரத் தொடங்கியுள்ளனர்.
 மதக்கலவரங்களில் ஈடுபட்டு வந்த சக்திகளை முந்தைய அரசுகள் பாராட்டுடி வந்தன. இன்று எந்தக் கலவலரக்காரருக்கும் அடைக்கலம் தரும் துணிச்சல் யாருக்கும் இல்லை. கலவரங்களில் ஈடுபடுவோருக்கும் குற்றவாளிகளுக்கும் சரியான இடம் சிறைச்சாலைகள்தான் என்பது மக்களுக்குத் தெரியும். இந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு குற்றவாளிகள் சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சட்டத்துடன் மோதியவர்கள் என்கவுன்ட்டர்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 இந்த அலிகர் நகரின் பாரம்பரியான பூட்டு உற்பத்தித் தொழிலுக்கு எனது அரசு ஊக்கமளித்துள்ளது. எனது அரசு எடுத்த முதல் முடிவுகளில் அலிகர் பூட்டுகளை மேம்படுத்துவதும் ஒன்றாகும் என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com