பட்ஜெட் ஒதுக்கீட்டில் இருந்து ரயில்வே துறை அதிக நிதியை எதிர்பார்க்காது

பட்ஜெட் ஒதுக்கீட்டில் இருந்து ரயில்வே துறை அதிக நிதியை எதிர்பார்க்காது என்று ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
பட்ஜெட் ஒதுக்கீட்டில் இருந்து ரயில்வே துறை அதிக நிதியை எதிர்பார்க்காது

பட்ஜெட் ஒதுக்கீட்டில் இருந்து ரயில்வே துறை அதிக நிதியை எதிர்பார்க்காது என்று ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
 ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து மத்திய பொது பட்ஜெட்டும், ரயில்வே பட்ஜெட்டும் தனித்தனியாகவே தாக்கல் செய்யப்பட்டு வந்தன. எனினும், கடந்த 1924 ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வந்த இந்த நடைமுறையை மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நடப்பாண்டில் மாற்றியமைத்தது. அதன்படி இந்த இரு பட்ஜெட்டுகளையும் இணைத்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த வகையில், அவர் அடுத்த ஆண்டு (2018) பிப்ரவரி 1-ஆம் தேதி ஒருங்கிணைந்த இரண்டாவது பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உள்ளார்.
 இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் இருந்து ரயில்வே துறை அதிக நிதியை எதிர்பார்க்காது என்று ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், தில்லியில் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:
 மத்திய பட்ஜெட்டில் இருந்து எனது துறைக்கு அதிக நிதி தேவையில்லை. ரயில்வே துறையானது தனது செலவுகளுக்காக நிதி திரட்டுவதற்கு புதிய வழிகளை ஆராய்ந்து வருகிறது.
 ரயில் பயணிகளுக்கும், சரக்குகளை அனுப்பும் வாடிக்கையாளர்களுக்கும் விரைவான முறையிலும், திறன்வாய்ந்த முறையிலும் சேவைகள் கிடைக்கச் செய்வது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம்.
 ஆசியாவின் மிகப் பழமையான ரயில்வே துறையான இந்திய ரயில்வே துறைக்கு நிதித் தட்டுப்பாடு ஏற்படாது. எனது மதிப்பீட்டைப் பொறுத்தவரை, ரயில்வே துறைக்குள்ளேயே நிதி ஆதாரங்களைத் திரட்ட முடியும்.
 பாதுகாப்பு தொடர்பான திட்டங்களுக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் எங்களிடம் போதுமான நிதி உள்ளது.
 எந்தவொரு முதலீடு தேவைப்பட்டாலும் அதை ரயில்வே துறைக்கு உள்ளிருந்தே திரட்ட முடியும்.
 ரயில்வே துறையால் சேமிக்கப்படும் நிதியைக் கொண்டு, வரும் 2018-19-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பொதுமக்களின் நலவாழ்வுக்காக கூடுதல் நிதியை நிதியமைச்சர் ஜேட்லியால் ஒதுக்கீடு செய்ய முடியும்.
 ரயில் பயணக் கட்டணம் உயர்த்தப்படும் வாய்ப்பை மறுக்க முடியுமா? என்று கேட்கிறீர்கள். பயணக் கட்டண உயர்வை விட திறன் உயர்வே அவசியம் என்று நான் கருதுகிறேன் என்றார் பியூஷ் கோயல்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com