உலக அழகி பட்டம் வென்ற மனுஷி குறித்து டிவிட்டரில் கிண்டல்: மன்னிப்புக் கேட்ட முன்னாள் மத்திய அமைச்சர்! 

உலக அழகி பட்டம் வென்ற இந்தியப் பெண் மனுஷி சில்லார்  குறித்து டிவிட்டரில் கிண்டல் செய்து கருத்து தெரிவித்திருந்த காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர்... 
உலக அழகி பட்டம் வென்ற மனுஷி குறித்து டிவிட்டரில் கிண்டல்: மன்னிப்புக் கேட்ட முன்னாள் மத்திய அமைச்சர்! 

புதுதில்லி: உலக அழகி பட்டம் வென்ற இந்தியப் பெண் மனுஷி சில்லார்  குறித்து டிவிட்டரில் கிண்டல் செய்து கருத்து தெரிவித்திருந்த காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், பின் எழுந்த எதிர்ப்பின் காரணமாக மன்னிப்பு கேட்டார்.

ஹரியாணா மாநிலத்தினைச் சேர்ந்தவர் மனுஷி சில்லார். இவர் மருத்துவர் பட்டம் பெற்றவர். இவர் இந்த ஆண்டு நடந்த இந்திய அழகிப் போட்டியில்  ‘மிஸ் இந்தியாவாக’ தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து சீனாவின் சான்யா நகரில் நடந்த 2017-ம் ஆண்டிற்கான உலக அழகிப்போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்றார்.

பின்னர் இறுதிச் சுற்றில் மனுஷி சில்லார் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார். இவரது வெற்றிக்கு பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ச்சியாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் காங்கிரசினைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தனது டிவிட்டர் பக்கத்தில், 'ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரிய தவறு; தற்பொழுது சர்வதேச அளவில் இந்திய பணத்திற்கு மதிப்பு உள்ளது. அதனால் தான் சில்லார்  கூட உலக அழகியாகிவிட்டது' எனப் தெரிவித்திருந்தார். ஹிந்தியில் சில்லார் என்றால் சில்லறை என்ற அர்த்தம் வருவைத்தால், இரு பொருள் தரும்படி அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

What a mistake to demonetise our currency! BJP should have realised that Indian cash dominates the globe: look, even our Chhillar has become Miss World!

— Shashi Tharoor (@ShashiTharoor) November 19, 2017

வேடிக்கை தொனியில் அவர் தெரிவித்திருந்த இந்த கருத்துக்கு பலத்த கண்டனங்கள் எழுந்தது. தேசிய மகளிர் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் தரூரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதன் காரணமாக அந்தப் பதிவினை நீக்கிய சசி தரூர் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார். அந்தப்  பதிவில் ‛சில்லார் குறித்து தான் விளையாட்டாக கருத்து கூறியதாகவும், இதன் காரணமாக யார் மனதேனும் புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும்' அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Guess the pun IS the lowest form of humour, & the bilingual pun lower still! Apologies to the many who seem to have been righteously offended by a light-hearted tweet today. Certainly no offence was meant to a bright young girl whose answer i've separately praised. Please: Chill!

— Shashi Tharoor (@ShashiTharoor) November 19, 2017

இந்த விஷயம் குறித்து மனுஷி சிலருக்கு தெரிய வந்தவுடன், அவர் தனது கவனத்துக்குக்கொண்டு வந்தவரிடம் பதில் அளித்து டிவிட்டரில் கூறியதாவது:

இதை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் உலகத்தையே ஜெயித்த ஒரு பெண், அடுத்தவரின் ஒரு சிறு வார்த்தைக்காக கவலை கொள்ள மாட்டார். 'சில்லார்' பற்றிய பேச்சு சிறிய விஷயம். சில்லாருக்குள் குளிர்ச்சியும் (சில்)  உள்ளது நாம் மறந்து விட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

Exactly @vineetjaintimes agree with you on this. A girl who has just won the World isn’t going to be upset over a tongue-in-cheek remark. ‘Chillar’ talk is just small change - let’s not forget the ‘chill’ within Chhillar

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com