முத்தலாக் முறையை முடிவுக்கு கொண்டு வர புதிய சட்ட முன்வரைவு: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல்! 

இஸ்லாமியர்களின் விவகாரத்து நடைமுறையான முத்தலாக்கை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் புதிய சட்ட முன்வரைவினை, வரவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு.. 
முத்தலாக் முறையை முடிவுக்கு கொண்டு வர புதிய சட்ட முன்வரைவு: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல்! 

புதுதில்லி: இஸ்லாமியர்களின் விவகாரத்து நடைமுறையான முத்தலாக்கை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் புதிய சட்ட முன்வரைவினை, வரவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

திருமணம் ஆன இஸ்லாமிய ஆண் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு மூன்று முறை தலாக் கூறும் முத்தலாக் நடை முறை பின்பற்றப்படுகிறது. ஆனால் இது தவறான நடைமுறை என்று கூறி, உச்ச நீதாய்நிற்றத்தில் முஸ்லிம் பெண்களும், பெண்கள் அமைப்புகளும் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கினை விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, முத்தலாக் சட்ட விரோதமானது என்றும், அரசியல் சாசனத்துக்கு எதிரானது; செல்லத்தக்கது அல்ல என்று ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது.

மேலும் இது தொடர்பாக உச்ச நீதின்றம் கூறியதாவது:

முத்தலாக் நடைமுறை தவறானதாக இருந்தாலும் இஸ்லாமியர்களுக்கான இந்த தனிச்சட்டத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆறு மாதங்களுக்கு இந்த  நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டு, அனைத்து அரசியல் கட்சிகள் ஆதரவுடன், முத்தலாக் நடைமுறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வரும் வகையில் மத்திய அரசு பாராளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்றவேண்டும். இந்த சட்டமானது இஸ்லாமிய ஷரியத் சட்டத்தையும் இஸ்லாமிய அமைப்புகளின் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையிலும் அமையவேண்டும்

ஆறு மாதங்களுக்குள் இது தொடர்பான சட்டத்தை அரசாங்கம் கொண்டு வரவில்லை என்றால் அரசாங்கம் சட்டத்தை இயற்றும் வரை முத்தலாக் மீதான தடை தொடரும்.

இவ்வாறு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது

இந்நிலையில் முத்தலாக்கை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் புதிய சட்ட முன்வரைவினை, வரவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. அல்லது ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்து உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com