நரேந்திர மோடியுடன் ரணில் விக்ரமசிங்கே சந்திப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வியாழக்கிழமை சந்திப்பு.
நரேந்திர மோடியுடன் ரணில் விக்ரமசிங்கே சந்திப்பு

இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, நான்கு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தார். 

செவ்வாய்கிழமை அன்று இந்தியா வந்த ரணில் விக்ரமசிங்கே, இரு நாடுகளின் உறவு தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரைச் சந்தித்துப் பேசுகிறார். 

இந்நிலையில், 5-ஆவது உலகளாவிய விண்வெளிக் கருத்தரங்கம் வியாழக்கிழமை துவங்கி நடைபெற்றது. இதனை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில், ரணில் விக்ரமசிங்கே சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

இதையடுத்து நவம்பர் 24-ந் தேதி தனது 4 நாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து இலங்கை திரும்புகிறார்.

இலங்கையின் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சிறு மற்றும் குறு தொழில் உள்ளிட்ட துறைகளின் கட்டமைப்பு மற்றும் மேம்பாடு தொடர்பான முன்னேற்றத்துக்காக இந்திய அரசால் வளர்ச்சி நிதியாக 2.63 பில்லியன் டாலர்கள் நிதி வரைவு அமைக்கப்பட்டு அதில் இதுவரை 458 மில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இரு நாடுகளின் உறவு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com