கற்றல் திறன் குறைபாடுள்ள குழந்தையினை நாற்காலியில் கட்டி வைத்த ஆசிரியர்! 

கல்வி நிலையம் ஒன்றில் நிகழ்ந்த போராட்டத்தின் காரணமாக, கற்றல் திறன் குறைபாடுள்ள குழந்தையினை ஆசிரியர் நாற்காலியில் கட்டி வைத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
கற்றல் திறன் குறைபாடுள்ள குழந்தையினை நாற்காலியில் கட்டி வைத்த ஆசிரியர்! 

பாட்டியாலா: கல்வி நிலையம் ஒன்றில் நிகழ்ந்த போராட்டத்தின் காரணமாக, கற்றல் திறன் குறைபாடுள்ள குழந்தையினை ஆசிரியர் நாற்காலியில் கட்டி வைத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தில் அமைந்துள்ளது நவஜீவினி சிறப்புக் கல்வி நிலையம். இங்கு கற்றல் திறன் குறைபாடு கொண்ட சுமார் 125 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக இருப்பவர் ஷஷி பாலா. இந்த கல்வி நிலையத்தில் தற்பொழுது ஊதிய உயர்வு கேட்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.          

இது தொடர்பான செய்திகளைச் சேகரிக்க உள்ளூர் பத்திரிக்கையாளர் ஒருவர் புதன்கிழமையன்று அப்பள்ளிக்குச் சென்றுள்ளார். அங்கு வகுப்பறை ஒன்றில் கற்றல் திறன் குறைபாடுள்ள ஏழு வயது மாணவன் ஒருவன், அவன்  அமர்ந்திருந்த நாற்காலியிலேயே துப்பட்டா, சிறு கயிறுகள் மற்றும் பாண்டேஜ் துணிகள் ஆகியவற்றினால் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளான்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பத்திரிக்கையாளர் எடுத்த விடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.இது தொடர்பாக தலைமை ஆசிரியர் ஷஷி பாலாவிடம் கேட்ட பொழுது, 'தனக்கு இது குறித்து எதுவும் தெரியாது என்றும், அந்த சமயத்தில் தன்னுடைய அறையில் பெற்றோர்களிடம் பேசிக் கொண்டு இருந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்பொழுது, மூன்று மாதங்ளுக்கு முன்பே சில ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டம் துவங்கியதாகவும், அவர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் சில ஆசிரியர்கள் தற்சமயம் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அதன் காரணமாக மாணவர்களுக்கு உதவி செய்ய டிப்ளோமா படித்த தற்காலிக ஊழியர்களை பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார். எனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  யாரோ ஒரு ஆசிரியர் திருட்டுத்தனமாக உள்ளே புகுந்து, நிர்வாகத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவதற்கு இப்படிச் செய்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரான ஷைனா கபூர், தலைமையாசிரியர் பாலா, அப்பொழுது இருந்த ஆசிரியர்கள் மற்றும் குறிப்பிட்ட குழந்தையின் பெற்றோரிடமும் வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்டார்.

அதேசமயம் பாட்டியாலா காவல் துணை ஆணையர் அமித் குமார் இதுகுறித்து போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com