வீட்டில் கழிப்பறை இல்லாததால் மாமனார் மீது புகார் அளித்த மருமகள்!

வீட்டில் கழிப்பறை இல்லாததால் மனதளவில் பாதிக்கப்பட்ட மருமகள் தனது மாமனார் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும்

பாட்னா: வீட்டில் கழிப்பறை இல்லாததால் மனதளவில் பாதிக்கப்பட்ட மருமகள் தனது மாமனார் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: 
பிகார் மாநிலம், முசாபர் மாவட்டம் தேகன் நியூரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி. இவரது கணவர் தமிழ்நாட்டில் வேலை செய்து வருகிறார். தனது கணவர் வீட்டில் கழிவறை இல்லாத நிலையில், மிகுந்த சிரமத்திற்கு உள்ளான ஜோதி, தனது மாமனாரிடம் கழிவறை கட்டித்தர தொடர்ந்து வலியுறுத்தியும், அதனை கண்டுகொள்ளாமல் தவிர்த்து வந்த தனது மாமனார் மற்றும் கணவனின் தம்பி மீதும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக மாமனார் மற்றும் கணவனின் தம்பி காவல்நிலையத்தில் விசாரணைக்கு வந்த போது, விரைவில் வீட்டில் கழிப்பறை கட்டித்தருகிறோம் என எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுத்ததன் அடிப்படையில் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

ஒரு வாரத்திற்குள் கழிப்பறை கட்டித்தர வேண்டும் என ஜோதி வலியுறுத்திய நிலையில், பணம் ஏற்பாடு செய்ய கூடுதல் அவகாசம் கேட்டனர், பின்னர் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தனது புகாரை ஜோதி திரும்பப்பெற்றுக்கொண்டார் என கூறினர்.

தனது கணவர் வீட்டில் கழிவறை இல்லாத நிலையில், மிகுந்த சிரமத்திற்கு உள்ளான ஜோதி தனது கணவர் தமிழகத்திலிருந்து சொந்த ஊருக்கு வரும் போது மட்டுமே மாமனார் வீட்டுக்கு வந்து செல்வார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com