3 வருடங்களாக அழுகாத பிணம்: 'மம்மி'-யாக மாறிய பின்னணி?

கர்நாடக மாநிலத்தின் கிராமம் ஒன்றில் 3 வருடங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட பிணம் அழுகாத அதிசயம் நடந்துள்ளது.
3 வருடங்களாக அழுகாத பிணம்: 'மம்மி'-யாக மாறிய பின்னணி?

கர்நாடக மாநிலத்தின் ஹூப்பள்ளி என்ற மாவட்டத்தின் தாஸ்திகொப்பா கிராமத்தில் உள்ள கல்காட்டகி எனும் தாலுக்காவில் 3 வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்ட பிணம் அழுகாமல் மண்ணில் மட்காமல் இருந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

அந்த தாலுக்காவைச் சேர்ந்த கொப்பட் என்பவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் இறந்துள்ளார். இதையடுத்து அவரது பிணம் அங்குள்ள சுடுகாட்டில் புதைக்கப்பட்டது.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த நிங்கம்மா ஹுக்கி என்பவர் தற்போது இறந்துவிட்டார். எனவே அவரின் பிணத்தைப் புதைக்க அதே இடத்தில் மீண்டும் குழி தோண்டப்பட்டது.

அப்போது 3 வருடங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட கொப்பட் என்பவரின் பிணம் அழுகாமல் இருந்த அதிசயம் நடந்துள்ளது. இதனை கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அந்தப் பிணத்தைப் பார்த்துச் சென்றனர்.

இதுகுறித்து அங்குள்ள கே.ஐ.எம்.எஸ் மருத்துவமனையைச் சேர்ந்த ஃபாரன்ஸிக் நிபுணர் டாக்டர் கஜ்னன் நாயக் என்பவர் கூறியதாவது:

பொதுவாக ஒருவர் இறந்துவிட்டால், அடுத்த நொடி முதல் அவரது உடல் அழுகிடத் தொடங்கும். புதைக்கப்பட்ட சில தினங்களில் அந்த உடல் முழுவதும் மண்ணில் மட்கிவிடும். 

ஆனால் இந்த சம்பவத்தில் புதைக்கப்பட்ட பிணம் 3 வருடங்களாகியும் மக்கமால் இருப்பது அதிசயமாகும். இதில், இயற்கையாகவே அந்த உடல் 'மம்மி' (எகிப்தில் இறந்தவரின் உடலை பதப்படுத்தும் முறை ) செய்துகொண்டது.

ஏனெனில், ஒரு குறிப்பிட்ட தட்பவெட்ப நிலை மற்றும் அந்த இடத்தில் இருக்கும் நீரோட்டம் காரணமாக இது நடந்திருக்கலாம். இது அரிதிலும் அரிதானது. எனவே அந்த உடலை மருத்துவ பரிசோதனைக்கு எங்களிடம் ஒப்படைக்க வேண்டி அந்த குடும்பத்தாரிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் அவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர். மேலும் அந்த உடலை வேறு இடத்தில் புதைத்து விட்டனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com