டிக்கெட் கேட்ட பெண் நடத்துநர்; கும்மாங்குத்து விட்ட பெண் காவலர் (விடியோ)

பேருந்து பயணத்தின் பொழுது டிக்கெட் கேட்ட பெண் நடத்துநரை, பெண் காவலர் ஒருவர் சரமாரியாக தாக்கும் விடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
டிக்கெட் கேட்ட பெண் நடத்துநர்; கும்மாங்குத்து விட்ட பெண் காவலர் (விடியோ)

மஹபூப் நகர் (தெலுங்கானா): பேருந்து பயணத்தின் பொழுது டிக்கெட் கேட்ட பெண் நடத்துநரை, பெண் காவலர் ஒருவர் சரமாரியாக தாக்கும் விடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

தெலுங்கானா மாநிலத்தின் மஹபூப் நகர் பகுதியில் கடந்த வாரம் ரஜிதா என்ற பெண் காவலர் ஒருவர் அங்கிருந்து நவாப்பேட் என்ற பகுதிக்கு  பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

அப்பொழுது அவரிடம் பணியிலிருந்த பெண் நடத்துநர் டிக்கெட் கட்டணமான ரூபாய் 15-ஐ செலுத்துமாறு கூறியிருக்கிறார். அதற்கு ரஜிதா, 'பணியிலிருக்கும் அரசு ஊழியரான தனக்கு அரசுப் பேருந்தில் இலவசமாகப்  பயணம் செய்ய உரிமை உள்ளது' என்று கூறியிருக்கிறார்.

அதனை ஏற்காத பெண் நடத்துநர் மீண்டும் டிக்கெட் எடுக்குமாறு வலியுறுத்த அவர்களுக்குள் வாய்த் தகராறு தகராறு மூண்டிருக்கிறது. அது அப்படியே பெரிதாகி ஒருவரை ஒருவர் தாக்கத் துவங்கினர்.பெண் நடத்துநரைப் பிடித்து கீழே தள்ளிய ரஜிதா அவரை தொடர்ச்சியாக குத்தத் துவங்கினார்.

இந்த ஒட்டு மொத்த நிகழ்வையும் சக பயணி ஒருவர் எடுத்த விடியோவானது தற்பொழுது இணையத்தில் வைரலாகப் பார்வை வருகிறது. சண்டையின் ஊடே அவர் ரஜிதாவை நோக்கி , 'நடத்துநர் தன் கடமையைதான்  செய்கிறார் என்று கூறி தடுக்க முயன்றாலும் அவர்கள் கேட்பதாக இல்லை.

பின்னர் அந்த பெண் நடத்துநர் ரஜிதா பணிபுரியும் நவாப்பேட்காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் செய்துள்ளார்.  அதற்காக மஹபூப் நகர் காவல் கண்காணிப்பாளர் அதிகாரப்பூர்வமற்ற விசாரணை ஒன்றுக்கு உத்தரவிட்டதாகவும், அதனைத் தொடர்ந்து தெலுங்கானா காவல் துறை சார்பாக முழுமையான விசாரணைக்கு ஆணையிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

விடியோ:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com