2018 மார்ச் வரை ரயில் டிக்கெட்டுக்கு சேவை கட்டணம் கிடையாது: ரூ.184 கோடி வருவாய் இழப்பு

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு தலா
2018 மார்ச் வரை ரயில் டிக்கெட்டுக்கு சேவை கட்டணம் கிடையாது: ரூ.184 கோடி வருவாய் இழப்பு

புதுதில்லி: இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு தலா ரூ.20 முதல் ரூ.40 வரை சேவை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. 

கடந்த நவம்பர் மாதம், உயர்மதிப்புடைய பழைய ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதைதொடர்ந்து, இணையவழி பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், சேவை கட்டணத்தில் ஜூன் 30 வரை சேவை கட்ட விலக்கு அளிக்கப்பட்டது. பின்னர், செப்டம்பர் 30-ஆம் தேதிவரை விலக்கு நீட்டிக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த சேவை கட்டண விலக்கை அடுத்த ஆண்டு 2018 மார்ச் மாதம் வரை நீட்டித்துள்ளது ரயில்வே வாரியம். இதுகுறித்து ஐ.ஆர்.சி.டி.சி.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்தின் வருவாயில் 33 சதவீதமும் ஆன்லைன் முன்பதிவுகளின் சேவை கட்டணத்திற்கு வழங்கப்படுவதாக மூத்த ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேவை கட்டண விலக்கு காரணமாக, 2016 ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி முதல் 2016 பிப்ரவரி 28 வரை ரயில்வேக்கு இதுவரை ரூ.184 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com