அஸ்ஸாமில் ஆராய்ச்சி மையம்: இஸ்ரோ திட்டம்

அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் ஆராய்ச்சி மையம் ஒன்றை அமைக்கவுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது.
அஸ்ஸாமில் ஆராய்ச்சி மையம்: இஸ்ரோ திட்டம்

அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் ஆராய்ச்சி மையம் ஒன்றை அமைக்கவுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது.
இதுகுறித்து அஸ்ஸாம் மாநில அரசு அதிகாரிகள், குவாஹாட்டி நகரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
குவாஹாட்டி நகரில் பிரத்யேக ஆராய்ச்சி மையத்தை இஸ்ரோ அமைக்கவுள்ளது. ஜிபிஎஸ், ஜிஐஎஸ் உள்ளிட்ட அறிவியல் தொழில்நுட்பங்களை அஸ்ஸாமின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவது குறித்து இந்த மையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
தொழில்முனைவோர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கல்வியாளர்கள் ஆகியோருக்கு இந்த மையம் பெரிதும் பயன்படும்.
வெள்ளம் ஏற்படுவதை முன்கூட்டியே அறிந்துகொள்ளவும், மண் அரிப்பு, நிலச்சரிவு அபாயத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளவும் தொலை உணர் (ரிமோட் சென்சிங்) தொழில்நுட்பம் இந்த மையத்தில் பயன்படுத்தப்படவுள்ளது.
ஆராய்ச்சி மையம் அமைப்பது தொடர்பாக அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவாலுடன் இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார், வியாழக்கிழமை சந்தித்து கலந்தாலோசனை நடத்தினார்.
அப்போது, ஆராய்ச்சி மையம் அமைத்துக் கொள்ள இலவசமாக நிலம் அளிக்கத் தயார் என்று அவரிடம் சோனோவால் தெரிவித்தார். இதுதொடர்பாக இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஸ்ஸாமில் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு சட்டவிரோதமாக வர்த்தகம் செய்யப்படுவதைத் தடுக்க இஸ்ரோ உதவ வேண்டும் என்றும் சோனோவால் வேண்டுகோள் விடுத்தார்.
பிரம்மபுத்திரா நதியின் ஆழத்தை இஸ்ரோவுடன் இணைந்து மாநில அரசு ஆய்வு செய்யும் என்றும் அவர் கூறினார் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com