ஒரே மேடையில் கேஜரிவாலுடன் யஷ்வந்த் சின்ஹா

தில்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுடன் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா ஒரே மேடையில் அமர்ந்திருந்தார்.

தில்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுடன் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா ஒரே மேடையில் அமர்ந்திருந்தார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் சரிவைச் சந்தித்ததற்கு பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியுமே காரணம் என்று ஆங்கில இதழ் ஒன்றில் யஷ்வந்த் சின்ஹா அண்மையில் கட்டுரை எழுதினார். கட்சியில் இருந்துகொண்டே ஒரு மூத்த தலைவர் இதுபோன்ற கூறியது பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி எழுதிய ஆங்கிலப் புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழா தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் யஷ்வந்த் சின்ஹா பங்கேற்றார்.
அரவிந்த் கேஜரிவால், மணீஷ் திவாரி ஆகியோருடன் ஒரே மேடையில் அவரும் அமர்ந்திருந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
இவர்களுடன் ஒரே மேடையில் அமர்ந்ததற்காக பாஜக என் மீது நடவடிக்கை எடுத்தால், அந்த நாளை என் வாழ்வின் மிகச் சிறந்த நாளாகக் கருதுவேன். 
நான் மகாபாரதத்தில் வரும் சல்யன் என்று பிரதமர் மோடி விமர்சித்தார். பாண்டவர்களிடமிருந்து துரியோதனின் பேச்சை கேட்டு கௌரவர்கள் பக்கம் சென்றவர் சல்யன். 
ஆனால், துரியோதனனால்தான் அவர் கர்ணனனுக்குத் தேரோட்டியாக ஆனார் என்றார் யஷ்வந்த் சின்ஹா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com