சீனாவையும், பாகிஸ்தானையும் எதிர்கொள்ள வலிமை உள்ளது: விமானப் படைத் தளபதி

சீனாவையும், பாகிஸ்தானையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் வலிமை இந்தியாவுக்கு உள்ளது என்று விமானப் படையின் தளபதி பி.எஸ்.தனோவா கூறினார்.
சீனாவையும், பாகிஸ்தானையும் எதிர்கொள்ள வலிமை உள்ளது: விமானப் படைத் தளபதி

சீனாவையும், பாகிஸ்தானையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் வலிமை இந்தியாவுக்கு உள்ளது என்று விமானப் படையின் தளபதி பி.எஸ்.தனோவா கூறினார்.
இந்திய விமானப் படையின் நிறுவன நாள், வரும் 8-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, தில்லியில் பி.எஸ்.தனோவா, செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
சிக்கிம் எல்லையில், டோக்கா லாம் என்ற இடத்தில் இந்திய- சீன ராணுவத்தினருக்கு இடையே இன்னமும் போர்ப் பதற்ற சூழல் நீடிக்கிறது. சும்பி பள்ளத்தாக்கில் இருந்து சீன ராணுவம் இன்னமும் முழுமையாக தனது படைகளை விலக்கிக் கொள்ளவில்லை. 
இருப்பினும், இரு நாட்டு ராணுவமும் மோதலில் ஈடுபடவில்லை. சில நாள்களில், சீன ராணுவம் தங்களது படைகளை விலக்கிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டோக்கா லாம் பிரச்னைக்கு இரு நாடுகளும் பயன்பெறும் வகையில் சுமுகத் தீர்வு காணப்பட வேண்டும்.
பாகிஸ்தானுடனும், சீனாவுடனும் ஒரே நேரத்தில் இரு முனைப் போரில் ஈடுபடுவதற்கான வலிமை இந்திய விமானப் படைக்கு உள்ளது. எனினும், அதற்கான சாத்தியப்பாடு மிகக் குறைவாகவே உள்ளது.
இரு முனைப் போரில் ஈடுபடுவதற்கு இந்திய விமானப் படைக்கு 42 குழுக்கள் தேவைப்படுகின்றன. தற்போது, இந்திய விமானப் படையில் 33 குழுக்கள் மட்டுமே உள்ளன. இந்த எண்ணிக்கை, வரும் 2032-ஆம் ஆண்டுக்குள் 42-ஆக அதிகரிக்கும்.
விமானப் படையின் வலிமையை அதிகரிக்கச் செய்யும் வகையில், ரஷியாவிடம் இருந்து நீண்ட தூர இலக்கைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட 'எஸ்-400 டிரம்ப்' போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோன்று, 36 ரஃபேல் ரக போர் விமானங்களைக் கொள்முதல் செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எதிரி நாடுகளின் மீது மீண்டும் ஒரு துல்லியத் தாக்குதலை நடத்துவதற்கு இந்திய விமானப் படை தயாராக உள்ளது. வான் வெளியில் முழு வீச்சில் தாக்குதல் நடத்துவதற்கான திறன், நமது விமானப் படைக்கு உள்ளது. எனினும், துல்லியத் தாக்குதல் நடத்துவது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும். சீனாவுடன் போரில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்படுமானால், அதை எதிர்கொள்வதற்கான வலிமை இந்திய விமானப் படைக்கு உள்ளது.
பாகிஸ்தான் சீண்டினால், அந்நாட்டில் உள்ளஅணு ஆயுத மையங்கள் உள்ளிட்ட இலக்குகளை இந்திய விமானப் படையால் துல்லியமாகத் தாக்கி அழிக்க முடியும் என்றார் பி.எஸ்.தனோவா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com