தேசத்துக்காக உயிரிழக்கும் ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி: ராஜ்நாத் சிங் அறிவிப்பு

பாதுகாப்புப் பணியில் இருக்கும் ராணுவ வீரர் உயிரிழந்தால் அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என ராஜ்நாத் சிங் அறிவித்தார்.
தேசத்துக்காக உயிரிழக்கும் ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி: ராஜ்நாத் சிங் அறிவிப்பு

பாதுகாப்புப் பணியில் இருக்கும் ராணுவ வீரர் உயிரிழந்தால் அவரது குடும்பத்துக்கு மத்திய அரசு சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை அறிவித்தார்.

நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் கலவரங்கள் ஏற்படும் போது அவற்றை கட்டுப்படுத்த ஊர்காவல் படை (சி.ஆர்.பி.எஃப்) செயல்பட்டு வருகிறது.

அதன் நவீனமயமாக்கப்பட்ட பிரிவாக ஆர்.ஏ.எஃப் எனப்படும் ராபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் கடந்த 1991-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கப்பட்டது. பின்னர் 1992-ம் வருடம் அக்டோபர் 7-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள அதன் தலைமையகத்தில் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

ராபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் பிரிவில் கூடுதலாக 5 பட்டாலியன் பாதுகாப்புப் படை இணைக்கப்படுகிறது. இதன் செயல்பாடு வருகிற 2018-ம் ஆண்டு ஜனவரி முதல் இடம்பெறும்.

நாட்டில் பெருகி வரும் கலவரங்களை கருத்தில் கொண்டு அதனை கட்டுப்படுத்தும் விதமாக இந்த புதிய செயல்பாடு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பாதுகாப்புப் பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள் உயிரிழக்க நேர்ந்தால் அவரது குடும்பத்துக்கு மத்திய அரசு சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com