ஜிஎஸ்டி முடிவால் மக்களுக்கு முன்கூட்டியே தீபாவளி: மோடி பெருமிதம்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் இந்தியர்களுக்கு முன்கூட்டியே தீபாவளி வந்துவிட்டது என்று பிரதமர் மோடி பேசினார்.
ஜிஎஸ்டி முடிவால் மக்களுக்கு முன்கூட்டியே தீபாவளி: மோடி பெருமிதம்


துவாரகை: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் இந்தியர்களுக்கு முன்கூட்டியே தீபாவளி வந்துவிட்டது என்று பிரதமர் மோடி பேசினார்.

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக குஜராத் மாநிலம் சென்ற பிரதமர் மோடி, பயணத்தை துவங்குவதற்கு முன்பு துவார்காதிஷ் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

பிறகு, துவாரகையில் ஓகா - பெட் துவார்கா இடையே மேம்பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய இணை அமைச்சர் நிதின் கட்காரி, உங்களால் கண்களை தானம் அளிக்க முடியும். ஆனால் பார்வையை அல்ல. மோடியின் பார்வையால் இந்தியாவில் உள்ள கிராமங்கள், ஏழை மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை மேம்படப் போகிறது என்று பேசினார்.

விழாவில் பேசிய மோடி, இது வெறும் செங்கல் மற்றும் சிமெண்டால் கட்டப்படும் பாலம் மட்டும் அல்ல. இது வரலாற்றுடன் தொடர்பு கொண்டது. நான் துவாரகைக்கு வந்த உடனே உற்சாகத்துடன் காணப்படுகிறேன். இங்கே உற்சாகம் பொங்குகிறது. பெட் துவாரகை பல மோசமான நிலைமைகளை சந்தித்துள்ளது. ஆனால் தற்போது பல விஷயங்கள் மாறியுள்ளன என்றார்.

மீனவர்கள் நலன் குறித்து பேசிய பிரதமர், துறைமுகம் மற்றும் துறைமுகம் சார்ந்த பகுதிகளின் மேம்பாடு குறித்து உரிய கவனம் செலுத்தப்படுகிறது. அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி, அதிகாரம் வழங்கப்படும். குறைந்த வட்டியில் கடன் வழங்க பெரிய படகுகளை வாங்க மத்திய அரசு வழிவகை செய்யும் என்றார்.

நேற்று கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் இந்தியர்களுக்கு தீபாவளி பண்டிகை முன்கூட்டியே வந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து இந்த முடிவுகளை எடுத்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com