மூன்று தலைமுறையாக அமேதிக்கு என்னதான் செய்தீர்கள்? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி! 

மூன்று தலைமுறையாக அமேதி தொகுதியில் வென்றும் அந்த தொகுதிக்கு என்னதான் செய்தீர்கள் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு, பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
மூன்று தலைமுறையாக அமேதிக்கு என்னதான் செய்தீர்கள்? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி! 

புதுதில்லி: மூன்று தலைமுறையாக அமேதி தொகுதியில் வென்றும் அந்த தொகுதிக்கு என்னதான் செய்தீர்கள் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு, பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவின் நிறுவனம் ஒன்று வருமானத்துக்கு அதிகமாக முறைகேடாக சொத்து சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டி, ஆங்கில இணைய தளம் ஒன்றில் நேற்று முன்தினம் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதனை அடிப்படையாக கொண்டு ஜெய் மற்றும் அமிதா ஷா இருவரையும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தமது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலடியாக பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா இன்று ராகுலை கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மூன்று தலைமுறையாக நேரு குடும்பத்தினைச் சேர்ந்தோர்கள் அமேதி தொகுதியில் வெற்றி பெற்று வருகிறீர்கள். ஆனால் அந்த தொகுதிக்கு என்னதான் செய்தீர்கள்?

அமேதி தொகுதியினைப் பொறுத்த அளவில் நேரு குடும்பத்தின் கோட்டைஎன்று பெருமையாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் தொகுதிக்கு என்று என்ன விதமான முன்னேற்றமும் வந்து சேரவில்லை.   

உத்தரப்பிரதேசத்தில் வளர்ச்சியே இல்லை என்று ராகுல் குற்றம் சாட்டுகிறார். ஆனால் இத்தாலி கண்ணாடியினைப் போட்டுக் கொண்டு பார்த்தால் எந்த வளர்ச்சியும் கண்ணுக்கு தெரியாது.

அறுபது ஆண்டுகளாக காங்கிரசை நம்பி அவர்களுக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர். ஆனால் நாட்டிற்கு ஒன்றும் நடக்கவில்லை. தற்பொழுது பாரதிய ஜனதாவினையும், பிரதமர் மோடியையும் நம்புங்கள். நிறைய வளர்ச்சியும் சந்தோஷமும் நிகழும்.

இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com