ஒரு வருடத்திற்குப் பிறகு ஒரே மேடையில் முலாயம் மற்றும் அகிலேஷ்! 

சமாஜ்வாதி கட்சியில் உண்டான குழப்பங்களுக்குப் பிறகு, ஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பின் இன்று ஒரே மேடையில் முலாயம் யாதவ் மற்றும் அகிலேஷ் சிங் யாதவ் இருவரும் பங்கேற்றனர்.
ஒரு வருடத்திற்குப் பிறகு ஒரே மேடையில் முலாயம் மற்றும் அகிலேஷ்! 

லக்னௌ: சமாஜ்வாதி கட்சியில் உண்டான குழப்பங்களுக்குப் பிறகு, ஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பின் இன்று ஒரே மேடையில் முலாயம் யாதவ் மற்றும் அகிலேஷ் சிங் யாதவ் இருவரும் பங்கேற்றனர்.

சமாஜ்வாதி கட்சியில் ஒரு வருடத்திற்கு முன், அதன் அப்போதைய தலைவராக இருந்த முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது மகனும் அன்றைய உத்தரபிரதேச முதல்வருமான அகிலேஷ் இருவருக்கும் இடையில்  கருத்து வேறுபாடு ஏற்பட்டது. முலாயமின் சகோதரரான ஷிவ்பால் யாதவுக்கும், அகிலேஷுக்கும் இடையே உண்டான அதிகார போட்டியே இதற்கு காரணமாக அமைந்தது.  இதில் முலாயம் அவரது சகோதரரான ஷிவ்பால் யாதவுக்கு ஆதரவு தெரிவித்து, மகனையே எதிர்த்ததன் காரணமாக கட்சியில் பிளவு உண்டானது.

தேர்தல் ஆணையம் வரை சென்ற இந்த பிரச்சினையில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அணியே உண்மையான கட்சி என்று தேர்தல் ஆணையம் தீர்மானித்து அதற்கு கட்சியின் பெயரும், சின்னமும் கிடைத்தது.   அதன் பிறகு முலாயம் அவ்வளவாக எங்கும் வெளியே நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

இந்நிலையில் புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதியான ராம் மனோகர் லோஹியாவின் 50-ஆவது நினைவு தினம்  இன்று அனுசரிக்கப்பட்டது. இந்த் நிகழ்வில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். நிகழ்வுக்கு ஒன்றாக ஒரே வாகனத்தில் வந்த அவர்கள் அங்கு கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார்கள்.

பின்னர் இருவரும் ஒன்றாக லோஹியாவின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

ஆனால் இந்த நிகழ்வில் ஷிவ்பால் யாதவ் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com