சிறுமி ஆருஷி கொலை வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறது அலகாபாத் உயர் நீதிமன்றம்

சிறுமி ஆருஷி உள்ளிட்ட 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து, அவரது பெற்றோர் ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார் தம்பதி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது அலாகாபாத் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
சிறுமி ஆருஷி கொலை வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறது அலகாபாத் உயர் நீதிமன்றம்

சிறுமி ஆருஷி உள்ளிட்ட 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து, அவரது பெற்றோர் ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார் தம்பதி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது அலாகாபாத் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

இந்த இரட்டைக் கொலைகள் தொடர்பான வழக்கில் காஸியாபாதில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பில், ராஜேஷ், நூபுர் தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்தது. 

இந்நிலையில், இந்த வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் இருவரும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்து விட்டது.

இதையடுத்து, மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு அக்டோபர் 12ம் தேதி அறிவிக்கப்படும் என்று அலாகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பால கிருஷ்ண நாராயணா, அரவிந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு அறிவித்திருந்தது.

வழக்கின் பின்னணி:

தில்லி அருகே உள்ள நொய்டாவைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ் தல்வார்- நுபுர் தம்பதி. இவர்களது மகள் ஆருஷியும் (14), வீட்டுப் பணியாளர் ஹேம்ராஜும் கடந்த 2008-ஆம் ஆண்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இதில் ஆருஷியின் சடலம், தல்வார் தம்பதியின் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. ஹேம்ராஜின் சடலம், வீட்டு மேல் கூரையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இருவரையும் கொலை செய்தது யார் என்று மாநில போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, இந்தக் கொலை வழக்கு விசாரணை, சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணை நடத்தி, ஆருஷி உள்ளிட்ட 2 பேரையும் கொலை செய்ததாக ராஜேஷ், நூபுர் தம்பதியை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com